சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க.. அட்வைஸ் செய்த லாலு.. ராகுலின் பதில் என்ன தெரியுமா?

Jun 24, 2023,09:54 AM IST
டெல்லி : சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளும்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவுரை வழங்கி உள்ளார். 

அதற்கு அதே இடத்திலேயே தனது பதிலையும் ராகுல் தெரிவித்த சுவாரஸ்ய சம்பவம் நேற்று பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அரங்கேறியது.



நீண்ட காலத்திற்கு பிறகு பங்கேற்கும் ஒரு பொது நிகழ்ச்சியாக, நேற்று பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் அரசியல் ஆலோசனை கூட்டத்தில் லாலு பிரசாத் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் தலைவர்கள் பேசினர். அப்போது லாலு பிரசாத் யாதவ் பேசியபோது பழைய மாதிரி கலகலப்பாக பேசினார்.

லாலு பிரசாத்யாதவ் பேசுகையில், ராகுல் காந்தி சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். முன்னாடியே நான் சொன்னேன். அவர் கேட்கலை. இப்போதும் லேட் ஆகலை.. கல்யாணம் பண்ணிக்கலாம். அந்த திருமண நிகழ்விலும் நாங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார். இதை கேட்டு ராகுல் உள்ள அனைவரும் சிரித்து விட்டனர்.

அதே இடத்திலேயே பதிலளித்த ராகுல், இப்போது தானே நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். அது நடக்கும் என்றார். அப்போதும் விடாத லாலு, உங்கள் அம்மா சொல்கிறார் நீங்கள் அவர் பேச்சை கேட்பதே இல்லை என்று. இப்போதே முடிவு செய்து விடுங்கள். நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்றார் லாலு.

ராகுல் காந்தி கல்யாணம் என்பது நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்தான் கழுவிய நீரில் நழுவிய மீனாக எஸ்கேப் ஆகி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் நடந்த பாரத் ஜோதா யாத்திரையின் போது திருமணம் பற்றி ராகுல் காந்தியிடம் கேட்ட போது, சரியான பெண் கிடைத்தால் செய்து கொள்வதாக தெரிவித்தார். யாராவது அப்படி இருக்கிறார்களா என கேட்டதற்கு அப்படிப்பட்ட அன்பான புத்திசாலி யாரும் இ��்லை என்றார். இது இளம் பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மெசேஜாக எடுத்துக் கொள்ளலாமா என்று பத்திரிக்கையாளரும் ஜாலியாக கலாய்த்தார்.

ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனக்கு வரப் போகும் வாழ்க்கை துணை தனது அம்மா சோனியா காந்தியின் குணங்களையும், பாட்டி இந்திரா காந்தியின் குணங்களையும் பெற்றவராக இருக்க வேண்டும் என கூறி இருந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்