மும்பை : மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் எடுத்துக் கொண்ட முதல் போட்டோ மற்றும் கடைசியாக எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்து, அவரின் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைத்து உருகி உள்ளார் பிரபல தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர்.
1969 ஆம் ஆண்டு துணைவன் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பிறகு படிப்படியாக வளர்ந்து தமிழ் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து டாப் நடிகையானார். 1970-80 களில் இளைஞர்கள் பலரின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள இவர் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
அழகுக்கு உதாரணமாக சொல்லப்பட்ட ஸ்ரீதேவி, பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு பாலிவுட்டிலேயே செட்டிலான ஸ்ரீதேவி, பல படங்களை தயாரித்து வந்தார். கடைசியாக 2018 ம் ஆண்டு துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

ஸ்ரீதேவியின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர், மனைவி ஸ்ரீதேவி பற்றிய நினைவுகளை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்ரீதேவியின் ஓவியங்கள் இரண்டை பகிர்ந்து, "நீ இப்போதும் எங்களை கவனித்துக் கொண்டிருக்கிறாய். நீ எங்களை விட்டு சென்று 5 வருடங்கள் ஆகி இருக்கலாம். ஆனால் உனது அன்பும், நினைவுகளும் என்றும் எங்களுடன் இருக்கும்" என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
அதே போன்று ஸ்ரீதேவியுடன் முதல் முறையாக எடுத்துக் கொண்ட போட்டோவையும், கடைசியாக கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சியில் எடுத்துக் கொண்ட போட்டோவையும் போனி கபூர் பகிர்ந்துள்ளார். தனது மனைவி ஸ்ரீதேவி தன்னை கட்டி அணைத்து முத்தமிடுவது போன்ற இளமை கால போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ள போனி கபூர், "உனது முத்தத்தை இப்போதும் உணர்கிறேன்" என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீதேவியின் நினைவு தினத்திற்கு பல நாட்கள் முன்பிருந்தே போனி கபூர் மட்டுமல்ல, மகள் ஜான்வி கபூரும் அம்மா ஸ்ரீதேவியுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பகிர்ந்து, உருக்கமாக தனது உணர்வுகளை பகிர்ந்து வருகிறார். தனது பிறந்த நாள், அன்னையர் தினம், ஸ்ரீதேவியின் பிறந்தநாள் என அனைத்து முக்கியமான நாட்களின் போதும் ஜான்வி கபூர் தனது அம்மா ஸ்ரீதேவியின் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட தவறுவதில்லை.
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது
பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு
{{comments.comment}}