"ஹாபி"ன்னா என்னான்னு தெரியுமா... வாங்க தெரிஞ்சுக்கங்க!

Jun 29, 2023,04:52 PM IST
- சுபா

"ஹாய் ஹலோ ஹவ் ஆர் யூ.. என்ன பண்ணிட்டிருக்கீங்க"

"வாம்மா மின்னல்.. சும்மா ஜாலியா என்னோட ஹாபி பத்தி யோசிச்சிட்டிருக்கேன்"

"அதென்ன உங்க ஹாபி?"

"வேலையெல்லாம் முடிஞ்சிருச்சு.. அதான் ஏதாவது பண்ணலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்"

"ஓஹோ.. வேலையெல்லாம் முடிஞ்சு ரெஸ்ட் எடுக்கும்போது ஏதாவது செய்யலாம்னு நினைச்சீங்களா.. அதுக்குப் பேரு ஹாபியே கிடையாது தெரியுமா உங்களுக்கு"



"என்ன சொல்ற நீ.."

"சொல்றேன் கேளுங்க"

ஹாபினா பொதுவா எல்லாரும் என்ன நினைச்சிட்டு இருக்காங்க?  நம்மளோட வேலை நேரம் முடிஞ்சதுக்கு அப்புறமா ஏதாவது ஒரு செயலில் நம் ஆர்வம் காட்டுறது தான் ஹாபின்னு நினைச்சிட்டு இருக்காங்க...அதற்கு அது இல்லைங்க அர்த்தம்.. என்ன வேலை இருந்தாலும்.. அதுக்கு நடுவுல நமக்குன்னு சில மணி நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் நமக்குப் பிடித்த, நமக்கு ஆர்வம் உள்ள, நம்ம மனசுக்கு சந்தோஷம் தரும் ஒரு செயலில் ஆர்வமா ஈடுபடுவதுதாங்க ஹாபி . 

வேலையெல்லாம் முடிஞ்ச பிறகு கிடைக்கும் நேரத்துக்குப் பெயர் leisure time.. அது ஹாபி கிடையாது..  ஒருத்தர்கிட்ட உங்களோட ஹாபி என்னன்னு கேட்டா "கார்டனிங்" அப்படின்னு சொல்லுவாங்க .. அதாவது       " "தோட்டக்கலை"... இப்ப இந்த தோட்டக்கலையை ஹாபின்னு  வைங்க உங்களுடைய வேலை முடிஞ்சதுக்கு அப்புறம் தான் தினமும் தண்ணி ஊத்துவிங்களா.. உங்களுக்கு எப்ப டைம் கிடைக்குமோ அப்பதான் செடி கொடிகளை பராமரிப்பீங்களா.. அப்படி செய்தால் என்னாகும்.. அந்த செடிகள் எல்லாம் எப்படி பிழைக்கும் ?? 
அப்படி பண்றதுக்கு பெயர் leisure time activity..

ஆனால் காலை மாலையில் இத்தனை நேரம் என ஒதுக்கி அந்த செடி கொடிகளை பராமரிப்பது, தண்ணீர் ஊற்றுவது, அவற்றுடன் நேரம் செலவிடுவது, அவற்றுடன் பேசுவது என்று ஒதுக்கிச் செய்வதற்குப் பெயர்தான் ஹாபி.   லெய்சர் டைமில் நாம் செய்யும் எதுவுமே நிரந்தரமானது அல்ல.. எப்போது வேண்டுமானாலும் அதைச் செய்யலாம் அல்லது விட்டு விடலாம்.

ஆனால் டெய்லி பண்றதுக்குப் பெயர்தான் ஹாபி.  அதேசமயம் நாம் செய்யும் எதுவுமே நமக்கு மன அமைதியும், நிம்மதியும் தர வேண்டுமே தர மன அமைதியைக் கெடுப்பதாக இருக்கக் கூடாது. 
கேம்ஸ் விளையாடறது ஒரு ஹாபி என்று சொல்லி  பலர் அதற்கு அடிமையாகி, அதனால் மன உளைச்சல், பதட்டம், எரிச்சல் ஏற்பட்டு உடல் நலம் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டு போயிருக்கிறார்கள். இது தவறு, இதைத் தவிர்க்க வேண்டும். நாம் செய்யும் எந்த செயலுமே நமது மன அமைதிக்ககாவும், சந்தோஷத்திற்காகவும் மட்டுமே தவிர.. அதைத் தாண்டி அது நம்மை பாடாயப்படுத்துவதற்கு ஒரு போதும் அனுமதிக்கவே கூடாது.

"என்ன  இப்ப புரிஞ்சுச்சா..."

"நல்லா புரிஞ்சுச்சும்மா.. ரொம்ப நல்லாவே புரிஞ்சுச்சு"!

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்