"பூங்காவில் லுங்கி, நைட்டியுடன் உலாத்தக் கூடாது"..  ஹேய் இன்னா மேன் இது?!?!

Jun 14, 2023,03:00 PM IST
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் பொது இடங்களில் நைட்டி, லுங்கியுடன் உலா வரக் கூடாது என்று அந்த குடியிருப்பு சங்கம் விதி விதித்திருப்பது கடும் கொந்தளிப்பையம், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதை இவர்கள் எப்படி நிர்ணயிக்க முடியும் என்று குடியிருப்பாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். கிரேட்டர் நொய்டாவின் 2வது பகுதியில் உள்ளது ஹிம்சாகர் சொசைட்டி என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு.



இந்த குடியிருப்பில் உள்ள குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் விதிமுறைகள் அடங்கிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்களும் குடியிருப்பாளர்களிடையே கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. அதில் முக்கியமானது குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் நைட்டி, லுங்கி அணிந்து வரக் கூடாது என்பதாகும். 

இந்த உத்தரவு குடியிருப்பாளர்கள் பலரையும் கடு்பபாக்கியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால் குடியிருப்பாளர்கள் சங்கத் தலைவர் சி.கே.கல்ரா இந்த உத்தரவு சரியானதே என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்கள் லுங்கியுடனும், பெண்கள் நைட்டியுடனும் பொது இடத்தில் உலாத்தினால் மறு பாலினருக்கு சங்கடமாக இருக்கும். அசவுகரியமாக இருக்கும். இதனால்தான் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளோம். இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்