நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. தாமரை.. என்னவா இருக்கும்.. எகிற வைக்கும் வெயிட்டிங்!

May 26, 2023,04:05 PM IST
சென்னை: தாமரை பாட்டு எழுதினால்.. பசி தூக்கம் இல்லாமல் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கலாம்.. சின்னதாக ஒரு பெரிய இடை வெளி விட்டு விட்டு மீண்டும் பாட்டுக்குத் திரும்பியிருக்கிறார் இந்த கவிதைத் தாமரை.

தமிழ் திரையுலகிற்குக் கிடைத்த அருமையான பாடலாசிரியர்தான் தாமரை. ஆணாதிக்கம் மிகுந்த இந்த திரையுலகில் தாமரை போன்ற பெண்ணரசிகள் ஆதிக்கமும், ஆளுமையும் செலுத்துவதும், செலுத்த வாய்ப்பு கிடைப்பதும் அரிதிலும் அரிதான விஷயம்.




தமிழில் கண்டதையும் கலக்க மாட்டேன், ஆபாசம் சேர்க்க மாட்டேன் என்று இலக்கணமும், எல்லையும் வகுத்துக் கொண்டு பாட்டு எழுதுபவர் தாமரை. இதனால்தான் இவருக்கு மற்றவர்களை விட வாய்ப்புகள் குறைவு. ஆனாலும் தாமரை கவலைப்படுவதில்லை. அவரது கொள்கைக்கு இணங்கும் பாடல்களை மட்டுமே புணைவது இவரது இயல்பு.

அவரது ஒவ்வொரு பாடலும் முத்திரை பதித்தவைதான்... தமிழ்த்தேனை திகட்ட திகட்ட ரசிகர்களுக்குக் கொடுத்தவைதான்.. கடைசியாக 99  சாங்க்ஸ் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாட்டு எழுதியிருந்தார் தாமரை. அதன் பின்னர் பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாட்டெழுத அமர்ந்திருக்கிறார். இதுதொடர்பாக ஒரு போஸ்ட் போட்டுள்ளார் தாமரை.

25.5.23. ஓர் இடைவெளிக்குப் பிறகு (After a while) .. என்ன படம் ? என்ன பாடல் ??? 
காத்திருப்போம் ( What movie ? What song ???Let's wait ) என்று தமிழும், ஆங்கிலமும் கலந்து அந்த போஸ்ட்டை எழுதியுள்ளார் தாமரை.. என்ன பாடலாக இருக்கும் என்று இப்போதே நமக்கு வெறி ஏறுகிறது. காரணம், தாமரையின் தமிழ் வரிகளுக்கு உயிர்ப்பு கொடுக்கும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இந்தப் பாடலுக்கும் இசை என்பதால்.

எதுவாக இருந்தால்.. நிச்சயம் "தாமரை இலை"யில் விழப் போவது அற்புதமான தமிழ் விருந்தாக மட்டுமே இருக்கும்.. ஸோ.. சந்தோஷமாக விருந்துண்ண காத்திருப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்