சென்னை : டைரக்டர் பாலா புதிய படம் ஒன்றை இயக்க போவதையும், அந்த படத்திற்கு ஐந்து பாடல்களை தான் எழுத உள்ளதையும் கவிஞர் வைரமுத்து உறுதி செய்துள்ளார். புதிய படம் வெற்றி அடைய டைரக்டர் பாலாவிற்கு அவர் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
1999 ம் ஆண்டு விக்ரம் நடித்த சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானவர் பாலா. தொடர்ந்து நந்தா, பிதாமகன் என பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார். பாலா படம் என்றாலே விருது கன்ஃபார்ம் என சொல்லும் அளவிற்கு அவரின் படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல நடிகர், நடிகைகளுக்கும் புதிய அடையாளத்தை கொடுத்தவர் டைரக்டர் பாலா என்று சொன்னால் அது மிகையாகாது.
2020 ம் ஆண்டு விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா என்ற படத்தை இயக்கினார் பாலா. இது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான அர்ஜூன் தாஸ் படத்தின் ரீமேக் ஆகும். ஆனால் பல காரணங்களால் இந்த படத்தில் இருந்து பாதியிலேயே பாலா வெளியேறினார். பிறகு வேறு டைரக்டரை வைத்து அந்த படத்தை எடுத்து முடித்தனர். வர்மா படத்தில் இருந்து வெளியேறிய பிறகு பாலா எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் 2021 ல் சூர்யா தயாரித்து, நடிக்கும் அவரின் 42 வது படத்தை பாலா இயக்க போவதாக அறிவிப்பு வெளியானது. படத்திற்கு வணங்கான் என டைட்டில் அறிவிக்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டு வந்தது. பிறகு கோவாவில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடத்தப்பட உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், அந்த படம் கைவிடப்பட்டதாகவும், சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி விட்டதாகவும் தகவல் வெளியானது. இப்போது வணங்கான் படத்தின் நிலை என்ன என யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில் பாலா புதிய படம் ஒன்றை இயக்க போவதாகவும், அதற்கு பாட்டெழுத தன்னை தேடி வந்து கதை சொன்னதாகவும், பாலா இயக்க உள்ள படத்திற்கு தான் ஐந்து பாடல்களை எழுத உள்ளதாகவும் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு பாலாவின் புதிய படத்திற்கு அவர் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
வைரமுத்து தனது பதிவில்,
பாலா!
தேடி வந்தாய்;
திகைக்குமொரு
கதைசொன்னாய்;
இதிலும் வெல்வாய்
உடம்பில் தினவும்
உள்ளத்தில் கனவும்
உள்ளவனைக்
கைவிடாது கலை
ஐந்து பாட்டிலும்
ஐந்தமிழுக்கு வழிவைத்தாய்
தீராத கங்குகளால்
பழுத்துக்கிடக்கிறது
என் பட்டறை
தோற்காத ஆயுதங்கள்
வடித்துக் கொடுப்பேன் போய் வா!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாலா- வைரமுத்து இணையும் படம் வெற்றி அடைய நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!
கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்
ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}