மதுரை: மதுரையைச் சேர்ந்த ஆயி பரிபூரணம் அம்மாள் ஒட்டு மொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இப்படியெல்லாம் செய்வதற்கு மிகப் பெரிய மனது வேண்டும்.. அந்த பெருந்தன்மையும், ஈர மனசும் ஆயி பரிபூரணம் அம்மாளுக்கு நிறையவே இருக்கிறது.
அப்படி என்ன செய்து விட்டார் பரிபூரணம் அம்மாள்?
மதுரை கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரிபூரணம் அம்மாள். இந்த ஊர், மேலூர் அருகே உள்ளது. இங்குதான் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம். இவரது கணவர் பெயர் உக்கிரபாண்டியன். இந்தத் தம்பதிக்கு ஒரே ஒரு மகள்தான், பெயர் ஜனனி. கணவர் உக்கிரபாண்டியன் 30 வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டு வளர்த்தார்.
பொம்பளைப் பிள்ளைக்கு நிஜமான சொத்து கல்விதான் என்பதால், அதை நிறையவே கொடுத்தார். நன்றாக படிக்க வைத்தார். மகளை கல்யாணமும் செய்து வைத்தார். சில வருடங்களுக்கு முன்பு மகள் ஜனனி காலமாகி விட்டார்.
பரிபூரணம் அம்மாவின் கணவர் வங்கியில் வேலை பார்த்து வந்தார். விபத்தில் அவர் உயிரிழந்த காரணத்தால், வாரிசுதாரர் அடிப்படையில் வங்கியில் பரிபூரணம் அம்மாவுக்கு வேலை கிடைத்தது. இவருக்குச் சொந்தமாக இவரது தந்தை கொடுத்த நிலம் கிட்டத்தட்ட ஒன்றரை ஏக்கர் நிலம், கொடிக்குளம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை அப்படியே தானமாக கொடிக்குளம் அரசுப் பள்ளிக்குக் கொடுத்துள்ளார் பரிபூரணம் அம்மாள். இதுதான் எல்லோரையும் வியக்க வைத்துள்ளது.
இந்த நிலத்தின் இப்போதைய மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 5 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கொடிக்குளம் அரசு பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதை அறிந்து, "இதுக்கெல்லாம் மருகாதீங்கய்யா.. என்னோட நிலத்தை தாரேன்.. எடுத்துக்கங்க" என்று தானப்பத்திரம் மூலமாக கொடுத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார் பரிபூரணம் அம்மாள்.
"இது என்னோட மகளோட ஆசைங்க.. அவதான் சொல்லிட்டே இருப்பா.. நம்ம ஸ்கூலுக்கு இடத்தை கொடுக்கணும்மா அப்படின்னு. இதோ கொடுத்திட்டேன். நான் நிறைய தான தர்மம் பண்ணிருக்கேன்..என் தம்பிக்கு என்னோட கிட்னியைக் கொடுத்திருக்கேன்.. நிறைய உதவி செஞ்சுருக்கேன்.. யார் கிட்யும் எதையும் சொல்ல மாட்டேன்.. என் மகளுக்காகத்தான் வாழ்ந்துட்டு வந்தேன்.. இப்ப என் மகளோட ஆசையையும் நிறைவேத்திட்டேன்.. என்று மனசு நிறைந்து, முகம் முழுக்க நிம்மதியுடன் கூறுகிறார் அந்த பெரிய மனது கொண்ட பெண்மணி
மதுரை கனரா வங்கியின் பிராந்திய அலுவலகத்தில்தான் பணியாற்றி வருகிறார் பரிபூரணம் அம்மாள். அவரை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் நேரில் சந்தித்துப் பாராட்டி மகிழ்ந்தார். வாரி எடுப்பதே வாழ்வின் இலட்சியம்" என இருப்பவர்களுக்கு மத்தியில் "வாரிக்கொடுப்பதே வாழ்வின் பயன்" என மதுரை - கொடிக்குளம் அரசுப்பள்ளிக்கு ரூ 7 கோடி மதிப்பிலான தனது நிலத்தை கொடையாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாள் அவர்களை சந்தித்து வாழ்த்தி, வணங்கி மகிழ்ந்தேன் என்று கூறியுள்ளார் சு. வெங்கடேசன்.
கல்விக்காக தனது பரம்பரை நிலத்தை நொடி கூட யோசிக்காமல் தூக்கிக் கொடுத்த உயர்ந்த உள்ளம் கொண்ட இந்த தேவதையை பாதம் தொட்டு வணங்குவோம்.
Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
{{comments.comment}}