பல்ல விழுந்துருச்சு.. மரமா மொளச்சுருச்சு.. சு. வெங்கடேசனை கலகலக்க வைத்த பாப்பா!

Jun 25, 2023,01:58 PM IST
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள குறிச்சிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்குப் போயிருந்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசனிடம் ஒரு குட்டிப் பாப்பா பேசிய உரையாடல் கலகலப்பை ஏற்படுத்தியது.

மதுரை எம்.பி தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு விசிட் அடித்து மக்கள் குறைகளைக் கேட்டு அதை சரி செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் சு. வெங்கடேசன். இதற்காக மக்கள் இயக்க சந்திப்பையும் அவர் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

நேற்று மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகராட்சி 1 - கிழக்கு  மண்டலத்தில் வார்டு எண்கள் (3, 4, 5, 6, 7, 8, 9, 11, 13, 17, 18, 19, 38, 40) பகுதி பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை எடுத்தார். அப்போது மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதேபோல மேலூர் அருகே உள்ள குறிச்சிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மக்களை சந்தித்தார் சு. வெங்கடேசன். அப்போது ஒரு மாணவியிடம் அவர் பேசியபோது அந்த மாணவி பேசிய விதம் அங்குள்ளோரை கலகலக்க வைத்தது.




அந்த உரையாடலை நீங்களும் கேளுங்க..

குட்டிப்பாப்பா:  என் பல்லு விழுந்துருச்சு
சு. வெங்கடேசன்: பல்லு விழுந்திருச்சா.. என்ன பண்ணீங்க
பாப்பா: அதை மண்ணுல புதைச்ச வச்சேன்.. அது மரமா வளர்ந்திருச்சு.
சு. வெங்கடேசன்: மரமா முளச்சிருச்சா.. எந்த மரம்
பாப்பா: இந்த மரம்தான்
சு. வெங்கடேசன்: இந்த மரம்தான் உங்க பல்லா.. அடேயப்பா பயங்கரமா இருக்கே.. இது உன் பல்லுதானா.. பல்லு எப்ப விழுந்துச்சு
பாப்பா: 6 வயசுல விழுந்துச்சு 
சு.வெங்கடேசன்: அப்படியா.. இப்ப உங்களுக்கு என்ன வயசு.
பாப்பா: 6 வயசு 
(சிரிப்பலை)
சு. வெங்கடேசன்: இப்பத்தான் விழுந்துச்சா பல்லு.. அதுக்குள்ள எப்படி வளர்ந்துச்சு
பாப்பா: தண்ணி ஊத்துனதால வளர்ந்துச்சு
சு. வெங்கடேசன்: அப்படியா.. இந்தப் பல்லு பிடிக்குமா.. அதான் புதைச்சு வச்சீங்களா
பாப்பா: எனக்குப் பிடிக்காத பல்ல
சு. வெங்கடேசன்:  பிடிக்காத பல்லா.. அதான் வேகமாக வளர்ந்திருச்சா

இப்படியாக தொடர்ந்தது அந்த க்யூட்டான உரையாடல்.  குழந்தைகள் உலகமே அழகானது.. அலாதியானது!

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்