கொல்லம் : இந்தியாவில் எத்தனையோ வினோத திருவிழாக்கள் நடக்கும் கோவில்கள் உள்ளன. அப்படி வினோத திருவிழாக்கள், வழிபாட்டு முறைகளுக்கு பெயர் போன மாநிலங்களில் கேரளாவும் ஒன்று.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டன்குளக்கரா தேவி கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சமயவிளக்கு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள பகவதி அம்மன் சுயம்பு மூர்த்தியாக தோன்றியவள். சமயவிளக்கு திருவிழாவின் சிறப்பம்சமே ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண் வேடமிட்டு, கையில் விளக்கேந்தி, ஊர்வலமாக வந்து பகவதி அம்மனை வழிபடுவது தான்.
ஆரம்பத்தில் பெண்கள் மட்டுமே வழிபட்டு வந்த கோவிலில் பிறகு ஆண்களும் பெண் வேடமிட்டு வழிபட துவங்கி உள்ளனர். இப்படி வழிபடுவதால் தொழில், வேலை சிறக்கும், செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. சமயவிளக்கு திருவிழாவானது ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் 19 நாட்கள் நடைபெறும். திருவிழாவின் கடைசி இரண்டு நாட்கள், பெரிய யானை மீது அம்ம���் உலா வரும் வைபவம் விடிய விடிய நடைபெறும். இந்த ஊர்வலத்தை கண்டால் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் நீண்ட வரிசையில் நின்று மக்கள் இதனை தரிசனம் செய்வார்கள்.
தமிழகத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் போன்று சமயவிளக்கு திருவிழாவின் போதும், தங்களுக்கென்று அங்கீகாரம் தரும் நாள் என கருதி திருநங்கைகள் பலரும் இந்த திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்த திருவிழாவிலும் பெண்களைப் போல் சிறப்பாக அலங்காரம் செய்து கொள்ளும் ஆண் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்படுகிறார்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}