அடிச்சுச் சொல்றேன்.. மிச்சல் ஓபாமாதான் அடுத்த அதிபர்.. ஜாவேத் அக்தர் ஆரூடம்!

Jun 03, 2023,04:00 PM IST

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், அடுத்த அமெரிக்க அதிபராக மிச்சல் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார்.

பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், நான் இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர். தற்போது அமெரிக்காவில் இருக்கிறேன். பல நகரங்களுக்கும் போனேன். பலரையும் சந்தித்துப் பேசினேன். அவர்களிடம் பேசியதிலிருந்து நான் உணர்ந்து கொண்டது என்னவென்றால், அடுத்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்குத்தான் வெற்றி வாய்ப்பு உள்ளது. அதுவும் மிச்சல் ஒபாமாதான் வருவார் என்று நான் உறுதியாக கூறுகிறேன் என்று எழுதியுள்ளார்.



முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவிதான் மிச்சல் ஒபாமா. பராக் ஒபாமாவுக்கு நிகரான செல்வாக்குடன்  அவரும் விளங்குகிறார். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நல்ல ரோல் மாடலாக திகழ்பவர் மிச்சல் என்று வெள்ளை மாளிகை இணையதளமே அவரைப் பாராட்டியுள்ளது. வக்கீலாகவும் எழுத்தாளராகவும் திகழ்கிறார் மிச்சல் ஒபாமா. 

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஜோ பிடன் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். மறுபக்கம் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

இப்படி இருக்கையில் எப்படி மிச்சல் ஒபாமா அதிபர் ஆவார் என்று ஜாவேத் அக்தர் கூறுகிறார் என்று தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்