தாயே பேசும் தெய்வம் நீயே... தாய்மையை போற்றும் அன்னையர் தினம்!

May 14, 2023,10:27 AM IST
சென்னை : தெய்வம் அனைத்து இடங்களிலும் தன்னால் இருக்க முடியாது என்பதற்காக தான் அம்மாவை படைத்தது படைத்தது என்பார்கள். ஆனால் தெய்வம் கூட தன்னை தேடி வந்து, வேண்டி, வரம் கேட்டும் பக்தனுக்கு , அவனது தகுதிக்கு ஏற்ப வரன் தரும். வாய் திறந்து கேட்டாமலேயே பிள்ளையின் முகத்தை பார்த்தே தனது பிள்ளைக்கு என்ன வேண்டும் என புரிந்து கொண்டு, அன்பை பொழியும் தாய், தெய்வத்திற்கும் ஒரு படி மேல் தான்.

அத்தகைய அன்னையை, தாய்மையை போற்றும் விதமாக மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுகிழமையில் உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் முதல் முதலில் அமெரிக்காவின் விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் அன்னா ஜார்விஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த நாளை விடுமுறை நாளாகவும் தனது நிறுவனத்தில் அறிவித்தார். பிறகு 1914 ம் ஆண்டு இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாக அறிவித்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன்.




அமெரிக்காவை தொடர்ந்து மெல்ல மெல்ல உலகின் பிறகு நாடுகளிலும் இது பரவி, இன்று அன்னையர் தினம் உலகமே கொண்டாடும் தினமாக மாறி உள்ளது. உலகின் பல நாடுகளிலும் பல தேதிகளில் அன்னையர் தினம் கொண்டாடும் பழக்கமும் உள்ளது. 2023 ம் ஆண்டில் அன்னையர் தினமானது மே 14 ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. 

ஒவ்வொரு உயிரின் வேராகவும் இருப்பது அன்னைதான்.. ஒவ்வொரு உயர்வையும் மனதார வாழ்த்துவதும் அன்னைதான்.. பிள்ளை மீது பொறாமை கொள்ளாமல் போற்றி பாதுகாத்து ஊக்கம் தருபவரும் அன்னைதான்.. கணிவும், கண்டிப்பும், பரிவும், பாசமும் கலந்து நடமாடும் தெய்வமாக திகழ்பவள் அன்னைதான்.

தன் உயிரை பணயம் வைத்து நம்மை ஒரு உயிராக இந்த உலகிற்கு தந்தவள் தாய். அந்த தாயின் அன்பும், தியாகமும், பரிவும் என்றென்றும் போற்றுதலுக்குரியது. வாழ்க்கை முழுவதும் கொண்டாடப்பட வேண்டியவள் தாய் என்றாலும், வருடத்தின் இந்த நாளில் மட்டுமாவது அவரை போற்றிடுவோம்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்