மீண்டும் தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி.. ஆகாஷ் அம்பானி தம்பதிக்கு 2வது குழந்தை!

Jun 01, 2023,05:04 PM IST
மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மீண்டும் தாத்தா ஆகியுள்ளார். அவரது மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேத்தாவுக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது. இது பெண் குழந்தையாகும்.

இந்தத் தம்பதிக்கு கடந்த 2020ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. அது ஆண் குழந்தையாகும். அதன் பெயர் பிருத்வி ஆகாஷ் அம்பானி. அதன் பின்னர் மீண்டும் கர்ப்பமடைந்த ஸ்லோகாவுக்கு நேற்று அழகிய பெண் குழந்தை பிறந்தது.



இந்த தகவலை அம்பானி குடும்பத்து நண்பரும், ராஜ்யசபா உறுப்பினருமான பரிமல் நத்வானியின் மகன் தன்ராஜ் நத்வானி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்த நீதா அம்பானி கலாச்சார மையத் திறப்பு விழாவின்போதுதான் தான் கர்ப்பமடைந்திருப்பது குறித்த தகவலை வெளியிட்டிருந்தார் ஸ்லோகா.  அப்போது அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

அந்த விழாவின்போது மேடிட்ட வயிறுடன் அவர் அழகான காஸ்ட்யூமில் வந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. தனியாக ஒரு போட்டோஷூட்டும் எடுத்திருந்தார் ஸ்லோகா.  இதுதொடர்பான புகைப்படங்களும் அப்போது வைரலாகியிருந்தன.

மீண்டும் தாயாகியுள்ள ஸ்லோகாவுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து கொண்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்