நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை...மாணவனின் தந்தையும் தற்கொலை

Aug 14, 2023,09:02 AM IST

சென்னை : நீட் தேர்வில் அடைந்த துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துயரத்தை தாங்க முடியாமல் தந்தையும் தற்கொலை செய்த கொண்ட சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் மாணவர் ஜெகதீஸ்வரன். இவர் மருத்துவம் படிக்க வேண்டும் என ஆசையில் நீட் தேர்விற்காக தயாராகி வந்துள்ளார். முதல் முறை நீட் தேர்வில் அடைந்த ஜெகதீஸ்வரன், முயற்சியை கை விடாமல் மீண்டும் நீட் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வந்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக இரண்டாவது முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.



இரண்டு முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடுமையான மன உளைச்சலில் இருந்த ஜெகதீஸ்வரன் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மகனின் இறப்பை தாங்க முடியாமல் இருந்த ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரும் இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட துயரம் மறைவதற்குள் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்