நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்.. இனி சோழவந்தானில் நிற்கும்.. மக்களே ஹேப்பிதானே!

Jul 12, 2023,02:56 PM IST
சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இனிமேல் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பல்வேறு முக்கிய ரயில்களும் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தென் கோடிப் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள், பல முக்கிய நிலையங்களில் நிற்பது இல்லை. இதுதொடர்பாக தொடர்ந்து ரயில்வேத் துறைக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் பல முக்கிய ரயில்கள் சில முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தற்போது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜூலை 18ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை எழும்பூர் - மதுரை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில், இனி மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையிலான நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இனி சோழவந்தானில் நின்று செல்லும். மறு மார்க்கத்தில் ஏற்கனவே இந்த ரயில் சோழவந்தானில் நின்று செல்வது குறிப்பிடத்தக்கது.




சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையிலான முத்துநகர் எக்ஸ்பிரஸ் இனி  திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். எனவே திருமங்கலம் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் இனி நேரடியாக திருமங்கலத்திலேயே போய் இறங்கிச் செல்லலாம். மதுரையில் இறங்கத் தேவையில்லை.

சென்னை எழும்பூர் - கொல்லம்  இடையிலான கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில், இனி ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


நெல்லை, பாலக்காடு இடையிலான பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில், கூடுதலாக  கீழ்க்கடையம், குண்டாரா ஆகிய  நிலையங்களில் நின்று செல்லும்.  பாலருவி எக்ஸ்பரிஸ் ரயில் ஜூலை 19ம் தேதி முதல் கூடுதலாக பாவூர்ச்சத்திரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

ராமேஸ்வரம் - பனாரஸ் இடையிலான வீக்லி எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 19ம் தேதி முதல் ராமநாதபுரத்தில் நின்று செல்லும். அதேபோல கோவை - ராமேஸ்வரம்  இடையிலான வீக்லி எக்ஸ்பிரஸ் ரயில் சிவகங்கை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இவை தற்காலிக மாற்றம்தான். பயணிகளிடையே கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இவை நிரந்தரமாக்கப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்