அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தது ஆங்கில புத்தாண்டு 2023  -  இதில் அப்படி என்ன ஸ்பெஷல் ?

Jan 01, 2023,12:24 AM IST

ஆங்கில புத்தாண்டான 2023 ம் ஆண்டு ஆனந்தமான, மங்கலகரமான ஆண்டாகவே பிறந்துள்ளது. ஞாயிற்று கிழமையில் வரும் அஸ்வினி நட்சத்திரத்தில் இந்த புத்தாண்டு பிறந்துள்ளது. வருடத்தின் முதல் நிகழ்வே ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த, புண்ணியம் தரும் வைகுண்ட ஏகாதசியாக அமைந்துள்ளது. 

மிக அரிதாக வரக் கூடிய ஒரே வருடத்தில் இரண்டு வைகுண்ட ஏகாதசிகள், ஒரே மாதத்தில் 3 பிரதோஷங்கள் என பல சிறப்புக்களை ஆன்மிக ரீதியாக  கொண்டதாகவே  இந்த ஆண்டு அமைந்துள்ளது. ஆன்மிக ரீதியாக மட்டுமல்ல ஜோதிட ரீதியாகவும் பிறந்துள்ள 2023 ம் ஆண்டு அதிர்ஷ்டகரமான ஆண்டாகவே பார்க்கப்படுகிறது. 


ஞாயிற்றுக்கிழமை என்பது சூரியனுக்குரிய நாள். பொதுவாக 27 நட்சத்திரங்களில் அஸ்வினி நட்சத்திரத்திற்கு தனி சிறப்பு உண்டு. 27 நட்சத்திரங்களில் முதன்மையானது அஸ்வினி நட்சத்திரம். அறிவியல் படி சூரியனை விடவும் 18 மடங்கு குறுக்கு அளவில் பெரிய நட்சத்திரம் அஸ்வினி தான். இந்த நட்சத்திரத்தை எல்லா நாட்களும் பார்த்து விட முடியாது. டிசம்பர், செப்டம்பர், மாதத்திற்கு ஒரு முறை என்ற ரீதியில் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே காண முடியும். அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே காண முடியும்.

பல ஆச்சரியமான சிறப்புக்களை கொண்ட அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய அதிபதி புதன் பகவான். நவகிரகங்களின் நாயகன் என அழைக்கப்படுபவர் சூரியன். இவர் அதிகாரத்திற்கும், அதிகார பதவிகளுக்கும் காரணமானவர். இதே போல் புதன் அறிவுக்கு காரணமாக விளங்குபவர். ஞாயிற்றுக்கிழமையில் வரும் அஸ்வினி நட்சத்திரம் சூரியன் - புதன் சேர்க்கையாகவே பார்க்கப்படுகிறது.

சூரியன் - புதன் இணைவதை புத ஆதித்ய யோகம் என்பார்கள். இதனால் கல்வி மற்றும் கலைகள்  உலகில் சிறந்து விளங்கும். தொழில், வியாபாரம் போன்றவற்றை வளரச் செய்யும். பொதுவாக புதனின் ஆதிக்கம் பெற்றவர்கள் எழுத்து திறன், சிந்தனைத் திறன், பேச்சாற்றல், சொற்பொழிவாற்றும் திறன், விரைந்து செயல்படும் திறன், வியாபார நுணுக்கங்கள் தெரிந்தவர்கள், நினைவாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். நகைச்சுவையாக பேசும் திறமையும் அவர்களிடம் இருக்கும்.

இதே போல் சூரியனின் ஆதிக்கம் பெற்றவர்கள் அதிகாரப்பதவி, ஆளுமை, தலைமை பொறுப்பு மிக்கவர்களாக இருப்பார்கள். இந்த இரண்டு கோள்களின் சேர்க்கை பலரின் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமையும்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்