உள்ளுக்குள் சோகம் இருந்தாலும்.. தோனிக்கு "பிராம்ப்ட்"டாக வாழ்த்து சொன்ன ஓ.பி. ரவீந்திரநாத்

Jul 07, 2023,11:44 AM IST
சென்னை: தேனி தொகுதியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிர வைக்கும் தீர்ப்பு கொடுத்துள்ள போதிலும் கூட அந்த சோகத்தை மறைத்துக் கொண்டு தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் தேனி எம்.பி.யாக உள்ள ஓ.பி. ரவீந்திரநாத்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவருமான தோனிக்கு இன்று பிறந்த நாளாகும். இதையடுத்து அவரது பிறந்த நாளை ரசிகர்கள் சூப்பராக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தோனிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன.



முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பல தரப்பினரும் தோனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையினர், கிரிக்கெட் உலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என வாழ்த்து மழை பொழிந்து கொண்டுள்ளது. அந்த வரிசையில் ஓ.பி. ரவீந்திரநாத்தும் தோனிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து ஓ.பி. ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  உலக கிரிக்கெட் அரங்கில்  தனக்கென தனியிடம் பிடித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், எனது அன்பு நண்பர் திரு.மகேந்திர சிங்  தோனி 
அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, நீண்ட ஆயுளோடு கிரிக்கெட் விளையாட்டில் மேலும் பல சாதனைகள் படைக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று கூறியுள்ளார் ரவீந்திரநாத்.

நேற்றுதான் அவரது எம். பி தேர்தல் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிர வைக்கும் தீர்ப்பை அளித்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் கூட மீளாத நிலையில் இருந்தாலும் கூட, தோனிக்கு ஓடி வந்து சூப்பராக பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் ஓ.பி. ரவீந்திரநாத். அவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்