ஒடிசா ரயில் விபத்து.. காயமடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுக்க குவியும் "மனிதம்"!

Jun 03, 2023,11:56 AM IST

புவனேஸ்வர் : ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த கொடூரமான ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுப்பதற்காக ஏராளமானோர் வரிசையில் காத்திருக்கிறார்கள். 

ஒடிசா மாநிலத்தில் நேற்று இரவு பெங்களூரு- ஹவுரா ரயில், ஷால்மர் - சென்னை இடையேயான ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின. இரண்டு பயணிகளின் ரயில்களிலும் ஏராளமான பெட்டிகள் தடம் புரண்டன. இதில் தற்போது வரை 233 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. 900 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.



விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. ஏராளமானோரின் உடல்கள் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் சிதைந்துள்ளன. அடையாளம் தெரியாத உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மீட்புப் பணிகள் இப்பகுதியில் நடந்து வருகிறது. இடுபாடுகளுக்குள் பலரும் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 200 ஆம்புலன்ஸ்கள் இரவு முதல் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இது போக 45 மொபைல் மருத்துவ குழுவும் சிகிச்சை அளித்து வருகிறது. 50 கூடுதல் டாக்டர்கள் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

படுகாயம் அடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுப்பதற்காக மருத்துவமனைகளிலும், ரத்த வங்கிகளிலும் ஏராளமான நல்ல உள்ளம் கொண்டவர்கள் வரிசையில் குவிந்து வருகின்றனர். இவர்கள் வரிசையில் நின்று ரத்த தானம் அளித்து வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்