எதிர்கட்சிகள் கூட்டம் : சோனியா காந்திக்கு தலைவர் பதவி...கூட்டணிக்கு பெயர் வைக்கவும் ஆலோசனை

Jul 18, 2023,12:07 PM IST
பெங்களூரு : 2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக.,வை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு, புதிய கூட்டணி அமைத்து வருகின்றன. பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தில் 15 கட்சிகள் கலந்து கொண்ட நிலையில் தற்போது இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடந்து வருகிறது. 

நேற்றும், இன்றும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணிக்கு சோனியா காந்தியை தலைவராகவும், நிதிஷ்குமாரை துணை தலைவராகவும் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



அதே போல் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணிக்கு பெயர் ஒன்றை வைக்கவும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதுவும் கூட்டணியின் பெயரில் இந்தியா என்ற பெயர் கட்டாயம் இடம் பெற வேண்டும். அனைத்து மாநில பிரச்சனைகளையும் உள்ளடக்கியதாக பொதுவான பெயர் ஒன்றை வைக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறதாம். இதனால் இன்று நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு தலைவர், கூட்டணியின் பெயர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்