அமெரிக்கா புறப்பட்டார் மோடி...டூர் பிளான் பற்றிய முழு விபரம் இதோ

Jun 20, 2023,11:13 AM IST
டில்லி : அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று (ஜூன் 20) வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இன்று காலை தனி விமானம் மூலம் டில்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி. அவரை அமைச்சர்கள் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி,  ஜூன் 21 ம் தேதி முதல் ஜூன் 23 ம் தேதி வரை தங்க உள்ளார். 



இந்த பயணத்தின் போது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நோபல் இலக்கியவாதிகள், பொருளாதார நிபுணர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், சுகாதாரத்துறை நிபுணர்கள் உள்ளிட்டோ 24 துறைகளை சேர்ந்த நிபுணர்களை சந்தித்து பேச உள்ளார். அதோடு டெஸ்லா நிறுவன இணை நிறுவனர் எலன் மாஸ்க்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை கட்டிடத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். தொடர்ந்து அமெரிக்கா அதிபர் ஜோ பைடனையும் மோடி சந்திக்க உள்ளார். பிறகு மோடிக்கு, பைடன் இரவு விருந்து அளிக்க உள்ளார். பிரதமர் மோடியை வரவேற்க வெள்ளை மாளிகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 

அமெரிக்காவின் கூட்டு சபை கூட்டத்திலும் உரையாற்ற பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கூட்டு சபை கூட்டத்தில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இது மோடிக்கும், இந்தியாவிற்கும் கிடைத்துள்ள மிகப் பெரிய கெளரவமாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

அதிகம் பார்க்கும் செய்திகள்