சேலம்: பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவியர் கருப்பு உடை அணிந்து வரக் கூடாது என்று சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது குறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசனம் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிறஆடை அணிந்து வரக்கூடாதென்று சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன்.
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர். என். ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கிப் பேசுகிறார். இந்த விழா தடர்பாக பெரியார் பல்கலைக்கழக பதிவாளளர் கு. தங்கவேல் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைபேசிகள் எடுத்து வருவதைத் தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி கேட்டுக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இந்த சுற்றறிக்கையை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஒரு கருத்தையும் வெளியிட்டுள்ளார்.
அதில், ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிறஆடை அணிந்து வரக்கூடாதென்று சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சு. வெங்கடேசன்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}