ஷிப்ட் டைம் முடிஞ்சுடுச்சு... நீங்க வீட்டுக்கு கிளம்பலாம்... இப்படி ஒரு கம்பெனி இந்தியாவிலா ?

Feb 19, 2023,02:56 PM IST
இந்தூர் : உங்க ஷிப்ட் டைம் முடிஞ்சுடுச்சு...இன்னும் 10 நிமிடத்தில் உங்க கம்ப்யூட்டர் ஷட் டவுன் ஆகி விடும். தயவு செய்து நீங்க வீட்டுக்கு கிளம்பலாம் என கம்பெனியே தங்கள் ஊழியர்களை வீட்டுக்கு போக சொல்லும் அறிவிப்பு பற்றிய தகவல் தான் கடந்த இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் சொல்லி அழுத்துக் கொள்ளும், புலம்பும் ஒரே விஷயம், ஷிப்ட் நேரத்தை தாண்டி வேலை பார்க்க வேண்டி உள்ளது. நேரம், காலம் இல்லாமல், எங்களுக்கும், எங்கள் குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்க முடியாமல் எப்போது பார்த்தாலும் ஆபீஸ் வேலை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று தான். வீட்டுக்கு போனாலும் ஆபீஸ் வேலை தான் பார்க்க வேண்டி உள்ளது என கவலைபடுபவர்கள் ஏராளம்.



ஆனால் மத்திய பிரதேஷத்தின் இந்தூரில் உள்ள SoftGrid Computers என்ற ஐடி நிறுவனத்தில், ஷிப்ட் நேரம் முடிய போகிறது. நீங்கள் வீட்டுக்கு கிளம்பலாம் என்ற அலார்ட் கம்ப்யூட்டரில் வந்து, அவர்களே நேரத்திற்கு ஊழியர்களை வீட்டுக்கு கிளம்ப சொல்லும் விஷயம் நடந்து வருகிறது. இந்த தகவலை அந்நிறுவனத்தில் ஹச்ஆர் டீமில் வேலை பார்க்கும் தன்வி கந்தேல்வால் என்ற பெண் ஊழியர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் தெரியும் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில், "எச்சரிக்கை ! உங்களின் ஷிப்ட் டைம் முடிந்து விட்டது. ஆபீஸ் கம்யூட்டர் இன்னும் 10 நிமிடத்தில் ஷட் டவுன் ஆகி விடும். தயவு செய்து வீட்டுக்கு கிளம்புங்கள்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த பதிவில் அந்த பெண் ஊழியர், இது கம்பெனியின் ப்ரொமோஷனுக்காகவோ, வெறும் கற்பனையான பதிவோ கிடையாது. நிஜமாக எங்களின் கம்பெனியில் நடக்கும் நடைமுறை இது தான் என குறிப்பிட்டுள்ளார்.

ஷிப்ட் டைம் முடிந்த பிறகு ஊழியர்கள் வேலை பார்க்க வேண்டியதில்லை என்ற அறிவிப்பு முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதை பகிர்வதில் எந்த நோக்கமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.



இதில் பலரும் நிஜமாகவே இந்த கம்பெனி இந்தியாவில் தான் இருக்கிறதா என ஆச்சரியமாக கேட்டுள்ளனர். இன்னும் சிலர் இப்படி ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும். நேரத்திற்கு வீட்டுக்கு போய் பல மாதங்கள் ஆகி விட்டது என வருத்ததுடன் தெரிவித்துள்ளார். ஆனால் கம்பெனியின் இந்த செயல்பாட்டிற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது ஊழியர்களை கடுமையாக வேலை பார்க்க வைக்க கம்பெனி கையாளும் ஒரு யுக்தி. ஷிப்ட் நேரம் முடிந்த பிறகு கம்ப்யூட்டர் ஷட் டவுன் ஆகி விடும் என்றால், அந்த நேரத்திற்குள் வேலையை முடிக்க வேண்டும் என ஊழியர்களை மறைமுகமாக கட்டாயப்படுத்துகிறார்கள் என்று தான் அர்த்தம். அதிக வேலை பளு இருந்தாலும் எப்படி ஷிப்ட் நேரத்திற்குள் முடிக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்