என் அண்ணன் கிட்ட இருந்து கத்துக்கங்க.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி "அட்வைஸ்"

May 01, 2023,11:35 AM IST

ஜம்கண்டி, கர்நாடகா: 91 முறை தன்னை காங்கிரஸ் விமர்சித்துள்ளதாக கூறியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பொது வாழ்க்கை என்றால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதைத் தாங்கிக் கொள்வது எப்படி என்று எனது அண்ணன் ராகுல் காந்தியிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் பிரியங்கா காந்தி வத்ரா.


கர்நாடக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரக் களம் அனலடிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மறுபக்கம், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்று வேகம் காட்டி வருகிறது காங்கிரஸ் கட்சியும்.


கர்நாடகத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகையில், தன்னை 91 முறை காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், தன்னை பாம்பு என்று காங்கிரஸ் தலைவர் வர்ணித்துள்ளார். ஆம் நான் பாம்புதான்.. பாம்பு எங்கே இருக்கும்.. சிவனின் கழுத்தைச் சுற்றியிருக்கும்.. நான் இந்த நாட்டு மக்களை சிவனாக பார்க்கிறேன்.. அவர்களைச் சுற்றியிருக்கும் பாம்பாக என்னை கருதிக் கொள்கிறேன என்று அதிரடியாக விளாசியிருந்தார்.




இந்த நிலையில் பிரதமர் மோடியின் "91 முறை விமர்சனம்" புகாருக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடக மாநிலம் ஜம்கண்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில்,


அவர்களை 91 முறை விமர்சனம் செய்து விட்டதாக சொல்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கத்தில் அடங்கி விடும். ஆனால் எங்களது குடும்பத்தைப் பற்றி செய்த அவதூறுகளைப் பார்த்தீர்கள் என்றால் ஒரு பெரிய பட்டியலே போடலாம். அதைப் பற்றி  பல புத்தகங்களை எழுதலாம்.


நான் பல பிரதமர்களைப் பார்த்து விட்டேன்.. இந்திரா காந்தி நாட்டுக்காக தனது உடலில் துப்பாக்கிக் குண்டுகளைப் பரிசாகப் பெற்றவர்.  ராஜீவ் காந்தி.. தனது நாட்டுக்காக இன்னுயிரைக் கொடுத்தவர். பி.வி.நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் நாட்டுக்காக கடுமையாக உழைத்தவர்கள்.


ஆனால் இப்போது உள்ள பிரதமர் என்ன செய்கிறார்.. என்னை விமர்சிக்கிறார்கள் என்று கண்ணீர் வீடுகிறார். உங்களது துயரத்தைக் கேட்டு அதைப் போக்குவதற்குப் பதில், தனது பிரச்சினையை சொல்லி நிற்கிறார்.  அவரது அலுவலகத்தில் இருப்போர் நாட்டு மக்களின் பிரச்சினையை பட்டியல் எடுத்து அவரிடம் கொடுக்கவில்லை போலும். மாறாக, யாரெல்லாம் விமர்சித்தார்கள், எத்தனை முறை விமர்சித்தார்கள் என்ற பட்டியலைக் கொடுத்துள்ளனர்.


மோடிஜி.. எனது அண்ணனைப் பாருங்கள்.. ராகுல் காந்தியிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.  நாட்டுக்காக, மக்களுக்காக துப்பாக்கித் தோட்டாவைக் கூட தாங்கத் தயாராக இருப்பவர் அவர். அவதூறுகளைக்  கண்டு அஞ்சாதவர் அவர். உண்மையின் பக்கம் நிற்பேன், உண்மைக்காக நிற்பேன் என்று சூளுரைத்தவர் அவர்.  நீங்கள் கேலி கிண்டல் செய்தாலும் துப்பாக்கியால் சுட்டாலும், கத்தியால் குத்தினாலும் தாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பவர் அவர்.


பயப்படாதீர்கள் மோடி ஜி. இது பொது வாழ்க்கை. பொது வாழ்க்கை என்று வந்து விட்டால் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.  அதற்கான தைரியமும், துணிச்சலும் இருப்பவர்தான் முன்னேறிச் செல்ல முடியும். நீங்கள் ஒரு நல்ல விஷயத்தையாவது கற்றுக் கொள்ளுங்கள்.. மக்களின் குரல்களைக் கேளுங்கள் என்று கூறினார் பிரியங்கா காந்தி.




சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்