சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பிரச்சார நிகழ்ச்சி நாளை சேலத்தில் நடைபெறவுள்ளது. இதில் 4998 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. நாளை மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை இந்தக் கூட்டம் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள கேவிபி கார்டன் வளாகத்தில் இக்கூட்டம் நடைபெறும்.

இதுதொடர்பாக கட்சி பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 13ஆம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று, சேலம் சீலநாயக்கன்பட்டி, KVP கார்டன் உள்வளாகத்தில், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
அனுமதிச் சீட்டு பெறாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுகிறோம். இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நேரில் வர இயலாத தொண்டர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் இந்த நிகழ்ச்சியானது முன்னணித் தொலைக்காட்சி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் சேலம் வருகையானது தேர்தல் பரப்புரையின் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுவதால், தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிவிடும்.. மு.க.ஸ்டாலின்
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
Motivational Short Story: சிற்றுயிர்களின் விழிப்புணர்வு மாநாடு
உள்ளபடிக் குடிநீரும் உப்பும் தான் கரிக்குதே!
387 வயசு இளமையான சென்னை.. எத்தனை எத்தனை சிறப்புகள்!
உதவியை உயர்ந்தவர்களுக்கு செய்வதை விட ஒருவரை உயர்த்துவதற்காக செய்!
Short Story: ருத்ர தாண்டவம்!
காத்திருப்பது சரியா!
{{comments.comment}}