50 வயதில் அப்பா.. "செம சநதோஷமா இருக்கு".. பிரபு தேவா ஓப்பன் டாக்!

Jun 14, 2023,10:41 AM IST
சென்னை : நடிகரும், நடன இயக்குனரும், டைரக்டருமான பிரபுதேவா தனது 50 வது வயதில் பெண் குழந்தைக்கு அப்பா ஆகி உள்ளதாக கடந்த சில நாட்களாக மீடியாக்களில் செய்தி பரவி வருகிறது. இது பற்றி தான் எப்படி உணர்கிறார் என்பது பற்றி பிரபு தேவா ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

பிரபு தேவா கூறுகையில், உண்மை தான். இந்த வயதில் நான் மீண்டும் அப்பா ஆகி உள்ளேன். மிக மிக மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் உணர்கிறேன். ஏற்கனவே எனது வேலைகளை குறைத்து கொண்டு விட்டேன். வேலை வேலை என அதிகமாக ஓடிக் கொண்டே இருந்து விட்டேன். இனியாவது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளில் தற்போது இறங்கி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.



நடிகர் பிரபுதேவாவிற்கு ரமலத் என்பவருடன் திருமணம் நடைபெற்று, அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். 2011 ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதற்கு பிறகு நடிகை நயன்தாராவை காதலிப்பதாகவும், அவரை பிரபு தேவா திருமணம் செய்ய போவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் திடீரென அவர்களின் காதல் பிரேக் அப் ஆனது. பிறகு நயன்தாரா, டைரக்டர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பிரபுதேவா, நயன்தாராவுடனான காதல் பிரேக் அப் ஆன பிறகு 2020 ம் ஆண்டு ஹிமானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் குடும்பத்தில் முதல் பெண் வாரிசு இந்த குழந்தை தானாம். இதனால் குடும்பமே இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

வயலா எலுமிச்சை.. எங்கள் ஊரின் பசுமை பொக்கிஷம்!

news

'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு

news

தேசத் தந்தை தேசத்தின் விந்தை .. நற்குணம்விற்ற நாட்டுச் சந்தை.. அகிம்சை தலைவன்!

news

சக்தி வாய்ந்த அகிம்சை போராளி.....!

news

கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்...யார் அவர்கள்? பரபரக்கும் அரசியல் களம்

news

விண்ணமுதம்!

news

தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி

news

என்ன சொல்ல...!

அதிகம் பார்க்கும் செய்திகள்