ஐதராபாத் : நாட்டு நாட்டு பாடலுக்கு தனது குழுவினருடன் நடனமாடி, ஆர்சி 15 ஷூட்டிங்கிற்கு வந்த ராம் சரணுக்கு பிரபுதேவா வரவேற்பு அளித்துள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் மீண்டும் திரும்பி பக்கமெல்லாம் நாட்டு நாட்டு பாடல் ஒலிக்க துவங்கி உள்ளது.
டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்திற்கு சமீத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருது கிடைத்தது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இந்த படத்தின் இசையமைப்பாளரான கீரவாணிக்கு கிடைத்தது. ஒரிஜினல் பாடலுக்கு ஆஸ்கார் விருது வென்ற முதல் தெலுங்கு படம் ஆர்ஆர்ஆர் என்பது குறிப்பிடத்தக்தது.
ஆர்ஆர்ஆர் படத்தின் Anthem ஆக நாட்டு நாட்டு பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடல் வெளியிடப்பட்டது முதலே பாடலின் இசை, வரிகள், இந்த பாடலில் ராம் சரணும் - ஜூனியர் என்டிஆரும் இணைந்து ஆடிய நடனம் ஆகி அனைத்தும் டிரெண்டானது. பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி ரீல் வீடியோ வெளியிட்டிருந்தனர். தற்போது இந்த பாடல் ஆஸ்கார் விருதினை வென்றுள்ளதால் மீண்டும் உலக அளவில் டிரெண்டாகி உள்ளது.
ஆஸ்கார் விழாவில் கலந்து கொள்ள சென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் மார்ச் 17 ம் தேதி இந்தியா திரும்பினர். இவர்களுக்கு ரசிகர்கள் பூ தூவி வரவேற்றனர். , பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்ஆர்ஆர் டீமுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் ஆர்சி 15 படத்தின் ஷூட்டிங் கர்னூலில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வந்த ராம் சரணுக்கு, அப்படத்தின் டான்ஸ் மாஸ்டரான பிரபுதேவா தனது நூற்றுக்கணக்கான குழுவினருடன் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி வரவேற்பு அளித்துள்ளார். ராம் சரணுக்கு பிரம்மாண்ட ஆள் உயர மாலையும் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாட்டு நாட்டு பாடலுக்கு பிரபு தேவா நடனமாடிய வீடியோவை ராம் சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு, இந்த அற்புதமான வரவேற்புக்கு வெறும் நன்றி என்று சொல்வது போதாது. இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியும், அசத்தல் வரவேற்பும் அளித்த கிராண்ட் மாஸ்டர் பிரபு தேவாவிற்கு எனது நன்றிகள் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இதற்கு ராம் சரணின் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் லைக்குகளையும், கமெண்ட்களையும் வாரி வழங்கி வருகின்றனர்.
தனது வரவேற்பு அளித்த டீமை மகிழ்விப்பதற்காக 80 செகண்ட்கள் ஒரே டேக்கில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடி காட்டி டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட ஆர்சி 15 டீம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் ராம் சரண்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}