அரச குடும்பத்தில்  புகைச்சல்.. ஆஹா.. "நாஸ்டிரடாமஸ்" ஜோசியம் பலிக்க ஆரம்பிச்சிருச்சு போலயே!

Jan 03, 2023,12:34 PM IST

லண்டன் : கருத்து வேறுபாடு காரணமாக இங்கிலாந்து அரச குடும்ப வாரிசான இளவரசர் ஹேரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரும் 2020 ம் ஆண்டே அரச குடும்பத்தில் இருந்து விலகி விட்டனர். மீடியாக்கள், அரச வாழ்க்கை என அனைத்தில் இருந்தும் விலகி அமெரிக்காவில் புதிய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். 


ஆனாலும் தற்போது வரை அரச குடும்பத்தினர் தங்களை எப்படி நடத்தினார்கள் என்பது பற்றி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இருந்தாலும் ஹேரி பற்றி செய்திகள் மீடியாக்களில் மிக குறைவாகவே வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் சமீபத்தில் மறைந்தார்.




அவரது இறுதி சடங்கில் ஹேரி, அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு மீடியாக்களின் பார்வை ஹேரி பக்கம் திரும்பி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அப்பாவும், சகோதரரும் எனக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவர்கள் என்னுடன் சமாதானம் பேச தயாராக இல்லை என்றார். 


ஹேரியின் முழு பேட்டி ஜனவரி 8 ம் தேதி ஒளிபரப்பப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து ஜனவரி 10 ம் தேதி Spare தலைப்பில் ஹேரி எழுதி உள்ள சுயசரிதை வெளியாக உள்ளது. நிச்சயம் இதில் அரசு குடும்பம் பற்றிய பல முக்கிய தகவல்களை அவர் குறிப்பிட்டிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஹேரியின் முழு பேட்டி மற்றும் சுயசரிதை எப்போது வரும், அதில் என்னவெல்லாம் சொல்லி இருப்பார் என தெரிந்து கொள்ள உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

2023 ம் ஆண்டு எப்படி இருக்கும் என 500 வருடங்களுக்கு முன்பே பிரபல ஜோதிடர் நாஸ்டிரடாமஸ் கணித்த குறிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், இங்கிலாந்து அரண்மனையில் மிகப் பெரிய தீ பற்றி எரியும் என குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை நாஸ்டிரடாமஸ் சொன்ன தீ தான் ஹேரி பேட்டி மூலம் புகைய ஆரம்பித்திருக்கிறதோ!!

சமீபத்திய செய்திகள்

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்