சகல விதமான பாவங்கள், தோஷங்கள் போக்கும் ரத சப்தமி வழிபாடு

Jan 28, 2023,12:27 PM IST
சென்னை : தை மாத சுக்லபட்சத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் ஏழாவது நாள் ரத சப்தமியாக கொண்டாடப்படுகிறது. இது சூரிய பகவானை வழிபடுவதற்கு உரிய நாளாகும். பூமி, சூரியனை நோக்கி சாய்ந்து, தனது சுழற்சியை துவக்கும் நாள் ரத சப்தமி எனப்படுகிறது.



இந்த நாளில் ஏழு குதிரைகள் பூட்டிய குதிரையில் பவனி வரும் சூரிய பகவானை வழிபாடு செய்தால் ஏழு ஜென்மங்கள் செய்த பாவங்களும், கிரக தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமியன்று ஏழு விதமான வாகனங்களில் எழுந்தருளி, மலையப்ப சுவாமி காட்சி தரும் வைபவம் நடக்கும்.

மகா சப்தமி, ஜெய சப்தமி, சூரிய ஜெயந்தி, ஆரோக்கிய சப்தமி உள்ளிட்ட பல பெயர்களில் ரத சப்தமி அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் ரத சப்தமி பல பெயர்களில் கொண்டாடப்படுவது வழக்கம். 2023 ம் ஆண்டில் ரத சப்தமி ஜனவரி 28 ம் தேதி வருகிறது. 

ஒரு ஆண்டில் வரும் முக்கியமான சப்தமி, இந்த ரத சப்தமி ஆகும். மகாபாரதத்தில் தனது உடலில் இருந்து உயிர் பிரிந்து மோட்சத்தை அடைவதற்கு பீஷ்மர் தேர்வு செய்த நாள் இந்த ரத சப்தமி. இது சூரிய பகவானின் பிறந்த நாள் என்றும் சொல்லப்படுகிறது. 

ரத சப்தமியன்று தலையில் ஏழு எருக்கம் இலைகளை அடுக்கி, அதில் ஆண்களாக இருந்தால் திருநீறும், பெண்களாக இருந்தாலும் மங்களும் வைத்து, அந்த இலைகளை தலையில் வைத்தபடி, அதிகாலையில் நீராட வேண்டும். இந்த நாளில் கடல் அல்லது புண்ணிய நதிகளில் சூரிய உதயத்தின் போது நீராடுவது சிறப்பானது.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்