இந்த வருடத்தின் "சிறந்த கவர்னர்" சக்திகாந்த தாஸ்.. புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

Mar 17, 2023,12:19 PM IST
டெல்லி: மத்திய வங்கிகள் விருது 2023ல் முக்கிய அம்சமாக, இந்த வருடத்தின் சிறந்த கவர்னர் விருது, ரிசர்வ்  வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸுக்கு வழங்கப்படுகிறது.

இது நாட்டுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பெருமையான தருணம் என்று பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார். புதன்கிழமை விருது அறிவிக்கப்பட்டது. கோவிட் பெருந்தொற்றுக்காலம், உக்ரைன் போர் என பொருளாதார சூழலுக்கு எதிரான கடும் நெருக்கடியான காலகட்டத்தில், இந்தியாவின் நிதிச் சந்தைகளை ஸ்திரப்படுத்தி, சீராக வழிநடத்தியமைக்காக சக்திகாந்த தாஸுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.




ரிசர்வ் வங்கி ஆளுநராக 2வது முறை பதவி நீட்டிப்பில் இருந்து வருகிறார்  சக்திகாந்த தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு கொரோனாவின் பிடியில் நாடு சிக்கியிருந்தபோது ரிசர்வ் வங்கி ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார். 

சக்திகாந்த தாஸுக்கு இந்த விருது கிடைத்திருப்பது குறித்து டிவீட் போட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது பெருமைமிகு தருணம். சக்திகாந்த தாஸுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறி வாழ்த்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!

news

பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை

news

Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

news

வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!

news

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!

news

கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

கம்பனும் கவியும்

news

என் இராமனே!

அதிகம் பார்க்கும் செய்திகள்