உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற ஐநாவில் தீர்மானம்.. இந்தியா நடுநிலை!

Feb 24, 2023,01:02 PM IST
ஜெனிவா : உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேறக் கோரி ஐநா பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த நாடுகளின் நிலைப்பாடு என்ன என்பதை கணிக்க முடியாமல் உலக நாடுகள் குழம்பி உள்ளன.

2014 ம் ஆண்டு முதல் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. ரஷ்ய படைகள் அவ்வப் போது உக்ரைன் பகுதியில் தாக்குதல்களை நடத்தி வந்தது. 2022 ம் ஆண்டு முதல் உக்ரைன் மீதான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. அதிக அளவிலான படைகளை குவித்து வருகிறது. இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை இனியும் தொடர வேண்டாம் என்பதால் போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா பொதுசபை மற்றும் உலக நாடுகள் பலவும் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.




சமீபத்தில் அமெரிக்கா உடனான அணுஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்தும் ரஷ்யா வெளியேறியது. அப்போது உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாமிர் புடின், உக்ரைன் உடனான போரை ஒரு போதும் நிறுத்த போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும். எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக இதை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஐநா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது சமீபத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இதில் ரஷ்யா, வடகொரியா, சிரியா உள்ளிட்ட 7 நாடுகள் ஐநாவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. அதே சமயம் இந்தியா, சீனா உள்ளிட்ட 32 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இருப்பினும் அதிகப்படியான நாடுகள் ஐநாவின் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்ததால், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

ஆசிரியர்!

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்