சிரியா மீது ரஷ்யா விமானப்படை தாக்குதல்...9 பேர் பலி

Jun 26, 2023,09:48 AM IST
டமாஸ்கஸ் : சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வடமேற்கு பகுதியான இட்லிப் பகுதியில் ரஷ்ய போர் படைகள் விமானப்படை தாக்குதல் நடத்தி உள்ளன. இதில் 9 பேர் பலியாகி உள்ளனர் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இட்லிப்பின் ஜிசிர் அல் சுகுர் நகரில் உள்ள பழ மற்றும் காய்கறிகள் சந்தைகள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இஸ்லாமிய நாடான இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் துவங்கி உள்ள சமயத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன.



கடந்த நான்கு நாட்களாக வானில் இருந்து துப்பாக்கிச் சூடுகளையும் ரஷ்ய படைகள் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ரஷ்யாவில் உள்நாட்டு போர் துவங்கும் சூழல் உருவாகி உள்ள நிலையில் சிரியா மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து வருவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல் குறித்து அமெரிக்க ஜே பைடன், சிரிய அதிபருடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

ஏற்கனவே ரஷ்யா, உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ளது. அதில் ரஷ்யாவுக்கு பெருத்த சேதமும் ஏற்பட்டு வருகிறது. இத்தனை நாட்களாக பேருதவி புரிந்து வந்த வாக்னர் குழுவும் தற்போது அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் உக்ரைன் போர் எந்த போக்கில் போகும், என்னாகும் என்ற குழப்பம் தலை தூக்கியுள்ளது. இந்த நிலையில் சிரியாவில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது ரஷ்யா என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்