ரஷ்யாவின் ஆயுத கிளர்ச்சி...புடினுக்கு எதிராக போரை அறிவித்த வாக்னர் ஆயுதக்குழு

Jun 24, 2023,02:01 PM IST
மாஸ்கோ :   உக்ரைன் போரை எதிர்கொள்ள ரஷ்யா சார்பில் களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப்படை மீது ரஷ்ய ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யாவின் தலைமையகத்தை கவிழ்க்க படையெடுக்க உள்ளதாக வாக்ஜர் படை தலைவர் எவ்னெஜி பிரிகோஜின் அறிவித்துள்ளார்.

அதோடு ரஷ்யாவின் முக்கிய நகரங்கள் பலவற்றை வாக்னர் படை கைப்பற்றி உள்ளது. இதனால் ரஷ்யாவில் ஆயுத கிளர்ச்சி உச்சகட்டத்தை எட்டி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக போரை வாக்னர் படைகள் அறிவித்துள்ளன. இதனால் கடுப்பான புடின், வாக்னர் படையினரை கண்டதும் சுடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.



நாட்டு மக்களுக்கு புடின் ஆற்றிய உரையிலும், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் தேச துரோகிகள். ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்தின் முதுகில் குத்தி விட்டனர். ரஷ்யாவில் உள்நாட்டு போரை அனுமதிக்க முடியாது. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ரஷ்யா நீண்ட வரலாறு கொண்ட நாடாக எப்போதும் ஓங்கி இருக்க வேண்டும் என புடின் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்