சேது சமுத்திர திட்டம் : மத்திய அரசு விரைந்து நிறைவேற்றக்கோரி சட்டசபையில் தீர்மானம்

Jan 12, 2023,02:14 PM IST
சென்னை : சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் இன்று (ஜனவரி 12) சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாசித்தார்.



ஸ்டாலின் தனது உரையில் கூறியதாவது : பாக் நீரினையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயர் தான் சேது சமுத்திரத் திட்டம். 1963 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் இடம்பெற்ற திட்டம் இது. பேரறிஞர் அண்ணா ஆட்சியில் இருந்த போதும், கலைஞர்  ஆட்சியில் இருந்த போதும் இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

இந்த திட்டத்தால் வர்த்தகம் பெருகும், மீனவர்களின் வாழ்க்கை செழிக்கும். தமிழகம் வளம் பெறும் என எடுத்துரைக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் தான் சேது சமுத்திரத் திட்டத்திற்கான பாதை எது என தீர்மானிக்கப்பட்டது. 2004 ல் மத்தியில் ஆட்சி மாறி, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் திட்டப் பணிகள் பாதியளவு முடிப்த நிலையில் பாஜக அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இந்த திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இந்த திட்டத்திற்கு எதிராக வழக்கு போட்டார்.

இந்த அரசியல் முட்டுக்கட்டை போடும் செயல் மட்டும் நடக்காமல் இருந்தால் இத்திட்டம் தொடங்கப்பட்டு பத்தாண்டு காலத்தில் ஏராளமான பயன் கிடைத்திருக்கும். தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கனவு திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவோம் என மத்திய பாஜக அரசு சொல்லி இருக்கிறது. ஆனால் ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்து எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.

இந்த நிலைப்பாட்டிற்கு பாஜக அரசு வந்துள்ள நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தைப் போராடியும் வாதாடியும் செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என கூறி தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த தீர்மானம் பின்னர் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

முகத்தில் முகம் பார்க்கலாம்

news

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!

news

Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

news

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!

news

கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!

news

பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்