சனி ஜெயந்தி : மூன்று சக்திகள் ஒன்றாகும் இந்த நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

May 19, 2023,10:55 AM IST
சென்னை : மே 19ம் தேதியான இன்று வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை ஆகும். நவகிரகங்களில் பலம் வாய்ந்த கிரகமாக கருதப்படும் சனி பகவான் அவதரித்தது இந்த நாளில் தான் என புராணங்கள் சொல்கின்றன. 

அதனால் இந்த நாளை சனி ஜெயந்தி என்றும், சனி அமாவாசை என்றும் அழைக்கிறோம். முன்னோர் வழிபாட்டிற்கு உரிய அமாவாசை நாளில் சனி வழிபாட்டையும் மேற்கொண்டால் ஆரோக்கியம், ஆயுள் பலம், செல்வ நலன்கள் ஆகியவற்றை பெறலாம்.

இந்த ஆண்டு வைகாசி மாத அமாவாசையானது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இதற்கு காரணம், இந்த ஆண்டு அமாவாசை, சனி ஜெயந்தி, முருகப் பெருமானுக்குரிய நட்சத்திரமான கிருத்திகை ஆகிய மூன்றும் ஒரே நாளில் அமைகின்றன. அதுவும் இவை மூன்று மங்கலகரமான வெள்ளிக்கிழமையும் அமைந்துள்ளது இன்னும் சிறப்பானது.



பீகார், பஞ்சாப், அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் இந்த நாளில் சுமங்கலி பெண்கள், சாவித்ரி விரதம் கடைபிடிப்பார்கள். இவ்வாறு விரதம் இருந்து சனி பகவானையும், சாவித்ரி தேவியையும் வழிபட்டால் தங்கள் கணவரின் ஆயும் நீடிக்கும் என்பது நம்பிக்கை. ஒருவரின் ஜாதகத்தில் ஆயுளை நிர்ணயிக்கக் கூடியவர் சனி பகவான். அதனாலேயே இவரை ஆயுட்காரகன் என்கிறோம்.

இந்த நாளில் புனித நீர் நிலைகள், நதிகளில் நீராடுவது பாவங்கள் அனைத்தையும் போக்கக் கூடியது. இந்த நாளில் தான, தர்மங்கள் செய்வது, அன்னதானம் செய்வது, பசு, காகம் ஆகியவற்றிற்கு உணவளிப்பது இன்னும் பல மடங்கு அதிகமான புண்ணியத்தை தரும். 

அமாவாசை திதியானது மே 18 ம் தேதி இரவு 10.09 மணிக்கு துவங்கி, மே 19 ம் தேதி இரவு 09.47 மணி வரை உள்ளது. காலை 07.54 மணிக்கு பிறகு கிருத்திகை திதியும் துவங்குகிறது. இன்றைய நாளில் அதிகாலையில் எழுந்து, புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, வழிபடுவது பல ஜென்மங்களில் செய்த பாவம் தீரும்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்