சிம்புவின் பத்துதல விமர்சனம்.. மிரட்டலா? சொதப்பலா?

Mar 31, 2023,10:13 AM IST
சென்னை : டைக்டர் ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், கெளதம் வாசுதேவ மேனன், பிரியா பவானி சங்கர், கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பத்து தல. ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு மார்ச் 30 ம் தேதி இந்த படம் ரிலீசாகி உள்ளது. ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கன்னட படமான முஃப்தி படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம். மணல் மாஃபியாவை அடிப்படையாகக் கொண்ட கதை. சிம்புவின் சமீபத்திய மாஸ் படங்கள், மாஸ் என்ட்ரி படங்களில் பத்து தல படமும் சேர்ந்துள்ளது. ஏஜிஆர் என்ற மணல் மாஃபியா தலைவன் ரோலில் சிம்பு நடித்துள்ளார். அரசியல், அடிதடி என அத்தனையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து, தனி ராஜாங்கமே நடத்தி வரும் தாதா ஏஜிஆர். 



ஊரையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா. அவரின் செய்யும் தவறுகளை கண்டுபிடிக்க அவரிடம் விஸ்வாசமான அடியாளாக சேரும் போலீஸ். கூடவே இருந்து உளவு பார்த்து, போலீசுக்கு தகவல் சொல்லி தாதாவை சிக்கலில் மாட்ட வைக்கும், தாதாவின் பாசத்திற்குரிய நபர் என தமிழ் சினிமா பல காலமாக பார்த்து பழகியே அதே பழைய கதை தான். ஆனால் சிம்பு ரசிகர்களை கவருவதற்காக கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி சொல்லி இருக்கிறார்கள். கடைசியில் தாதா போலீசிடம் பிடிபட்டாரா, இல்லையா என்பது தான் பத்துதல படத்தின் கதை.

ஃபர்ஸ்ஆஃப் எப்படி இருக்கு?

சிம்புவின் மாஸ் என்ட்ரி, ஏஆர்.ரஹ்மானின் மிரட்டலான இசை, கெளதம் கார்த்திக்கின் அசத்தல் நடிப்பு ஆகியவை படத்தின் முதல் பாதியை அனல் பறக்க வைத்துள்ளது. சிம்பு பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. கொஞ்சம் மெதுவாக சென்றாலும், அட்டகாசமான இன்டர்வல். அடுத்து என்ன நடக்க போகிறது என எதிர்பார்ப்பை ஆடியன்ஸ் மத்தியில் ஏற்படுத்துகிறது.

செகண்ட் ஆஃப் :

கெளதம் கார்த்திக்கும், சிம்புவும் போட்டி போட்டு நடித்துள்ளனர். சண்டை காட்சிகளில் சிம்பு பட்டையை கிளப்பி உள்ளார். வயதுக்கு மீறிய கேரக்டராக இருந்தாலும் சிம்புவின் இத்தனை வருட நடிப்பின் அனுபவம் படத்தில் தெரிகிறது. மாஸாக க்ளைமாக்ஸ்.

படத்தின் ப்ளஸ் : 

சிம்புவின் நடிப்பு, ஏஆர் ரஹ்மானின் இசை ஆகியன படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ். ஏஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு இன்னொரு ஹீரோ போல செயல்பட்டுள்ளது. கெளதம் கார்த்திக்கின் நடிப்பு அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. படம் முழுக்க த்ரில்லிங், ஆக்ஷன் காட்சிகளை வைத்து ரசிகர்களை சலிப்படையாமல் பார்த்துக் கொண்டுள்ளார் டைரக்டர். ரன்னிங் டைமும் படத்திற்கு மற்றொரு ப்ளஸ்

இதெல்லாம் மைனஸ் :

படம் ஆரம்பித்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் சிம்புவே வருகிறார். அவரை வழக்கமாக ஷூட்டிங்கிற்கு தான் லேட்டாக வருவார்கள் என்பார்கள். படத்திலும் அவரது என்ட்ரி லேட்டாக தான் வருகிறது என நெட்டிசன்கள் மீம்ஸ் போட துவங்கி விட்டனர். கெளதம் மேனனின் கேரக்டரை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக அமைத்திருக்கலாம். பழைய கதையை அப்படியே ரீமேக் செய்துள்ளதால், பல சீன்கள் கன்னட ரீமேக் படம் பார்க்கிற உணர்வை ஏற்படுத்துகிறது. அரசியல் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளில் சொதப்பி உள்ளனர்.

ஆடியன்ஸ் ரேட்டிங் :

சிம்புவின் நடிப்பு, ஆக்ஷன், கெளதம் கார்த்திக்கின் நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஆகியவற்றிற்காக பத்து தல படத்தை ஒரு பார்க்கலாம். இரண்டு மணி நேரம் 32 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த படத்திற்கு ஆடியன்ஸ் கொடுத்துள்ள ரேட்டிங் 5 க்கு 3.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்