"பத்து தல".. படத்திலும் துணையில்லை...வாழ்க்கையிலும் துணையில்லை.. தெறிக்க விட்ட சிம்பு!

Mar 20, 2023,07:29 PM IST
சென்னை : எனக்கு படத்திலும் துணையில்லை, நிஜ வாழ்க்கையிலும் துணையில்லை என பத்து தல படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிம்பு பேசிய வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

டைரக்டர் ஒபிலி கே. கிருஷ்ணா இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிம்பு, கெளதம் கார்த்தி, பிரியா பவானிசங்கர், கெளதம் மேனன் உள்ளிட்டோர்  நடித்துள்ள படம் பத்து தல. மாநாடு படத்திற்கு முன்பே துவங்கப்பட்ட பத்து தல படம், பல காரணங்களால் தொடர்ந்து தள்ளிப் போனது. மாநாடு படத்திற்காக உடல் எடையை குறைத்த சிம்பு, பத்து தல படத்தில் தான் நடிக்கும் தாதா கேரக்டருக்காக மீண்டும் உடல் எடையை அதிகரித்து நடித்தார்.



ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கும் பத்து தல படம் மார்ச் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மார்ச் 18 ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சிம்பு, கெளதம் கார்த்திக்கிற்காக தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். முதலில் 108 கிலோ எடை இருந்த போது இந்த கேரக்டருக்கு ஓகே சொல்லி பாதி படத்தை நடித்து விட்டேன். பிறகு மாநாடு படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு ஒவ்வொரு கிலோவாக எடையை குறைத்தேன்.

உடல் எடையை குறைத்து விட்டதால் பத்து தல படத்திற்கு செட் ஆகாது என நினைத்து, பணத்தை திருப்பி கொடுத்து விட்டு, படத்தில் இருந்து விலகி விடலாமா என நினைத்தேன். பிறகு கெளதமை யோசித்து தான் இந்த படத்தை முடித்து கொடுக்க வேண்டும் என முடிவு செய்தேன். அவர் தங்கமான பையன். பல கஷ்டங்களைத் தாண்டி இந்த நிலைக்கு வந்துள்ளார். மிக நல்ல நடிகர். நான் எப்போதும் என்னுடன் நடிக்கும் சக நடிகர்களை தட்டிக் கொடுத்து, பாராட்டுவேன். எனக்காக இல்லா விட்டாலும் கெளதமிற்காக பத்து தல படம் பிரம்மாண்ட வெற்றியை பெற வேண்டும். 

இங்கு தட்டி விடுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தட்டி கொடுத்து, தூக்கி விட யாரும் கிடையாது. எனக்கு தட்டிக் கொடுக்க எனது ரசிகர்களை தவிர வேறு யாரும் கிடையாது. டைரக்டர் என்னிடம் வந்து மீண்டும் உடல் எடையை ஏற்ற சொன்னார். நானே ரொம்ப கஷ்டப்பட்டு, இப்போது தான் உடல் எடையை குறைத்து சரியாகி வந்துள்ளேன். மீண்டும் நான் உடல் எடையை உயர்த்தினால், சிம்பு மீண்டும் உடல் எடையை அதிகமாக்கி சுற்றிக் கொண்டிருக்கிறார். இனி ஷூட்டிங்கிற்கு எல்லாம் சரியாக வரமாட்டார் என எழுதி விடுவார்கள். இங்கு கவிழ்த்து விடவும், காலை வாரி விடவும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

உடல் எடையை குறைக்க தெரிந்த எனக்கு மீண்டும் உயர்த்தி, மீண்டும் குறைக்க முடியாதா என நினைத்து தான் இந்த படத்தில் நடிக்க ஓகே சொன்னேன். இப்போ வேற வெலில் மாறி வந்திருக்கிறேன். எனது ரசிகர்களை மீண்டும் தலை குனிய வைக்க மாட்டேன். எனக்கு இந்த படத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி துணை கிடையாது. தனியாக தான் இருக்கிறேன். எனக்கு எனது ரசிகர்கள் மட்டும் தான் துணை என சிம்பு பேசினார்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

news

தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!

news

Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

news

சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!

news

சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!

news

Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!

அதிகம் பார்க்கும் செய்திகள்