பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உயிரிழப்பு

Feb 04, 2023,02:53 PM IST
சென்னை : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம், நுங்கபாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இவருக்கு சமீபத்தில் பத் பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.  இவரது உயிரிழப்பிற்கு என்ன காரணம் என தெரியவில்லை. 



77 வயதாகும் வாணி ஜெயராம் கிட்டதட்ட 50 ஆண்டுகளாக தென்னிந்திய மொழி சினிமாக்களில் பாடி வருகிறார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பின்னணி பாடி உள்ளார். இது தவிர தனிப்பாடல்கள், பக்திப் பாடல்கள் என 10,000 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட பல இந்திய மொழி சினிமாக்களில் இவர் பாட உள்ளார்.

சிறந்த பின்னணி பாடகிக்காக மூன்று முறை தேசிய விருது வாங்கி உள்ளார். ஆந்திரா, தமிழ்நாடு என மாநில அரசு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். 2012 ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட இசை அமைப்பின் சார்பில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவரது சொந்த பெயர் கலைவாணி ஆகும். வாணி என அனைவராலும் அழைக்கப்பட்ட இவர் தனது எட்டாவது வயதிலேயே ஆல் இந்தியா ரேடியோவில் இசை நிகழ்ச்சி நடத்தி உள்ளார். சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்த இவர் ஸ்டேட் வங்கியில் 1967 களில் பணியாற்றி உள்ளார். வாணி ஜெயராம், தெலுங்கு சினிமாவிலேயே முதலில் பாட துவங்கினார். தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பிரபலமான பிறகே தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் தாயும் சேயும் என்ற பாடத்திற்காகவே இவர் முதன் முதலில் பின்னணி பாடினார். ஆனால் அந்த பாடல் வெளியாகவில்லை. பிறகு 1973 ல் வீட்டுக்கு வந்த மருமகள் என்ற படத்திற்காக டிஎம்எஸ் உடன் இணைந்து பாடிய ஓர் இடம் உன்னிடம் என்ற பாடலே தமிழிலில் இவர் பாடி வெளிவந்த முதல் பாடலாகும். டிஎம்எஸ். யேசுதாஸ், எஸ்பிபி, ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலருடன் இணைந்து ஏராளமான பாடல்கள் பாடி உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்