சிவகார்த்திகேயன் மகனா இது.. பார்த்தவுடன் வசீகரிக்கும்.. சூப்பர் க்யூட் போட்டோஸ்!

Jul 12, 2023,04:48 PM IST
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி, மகள், மகனுடன் இருக்கும் குடும்பப் படங்களை வெளியிட்டுள்ளார். மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் இது வரவேற்பைப் பெற்றுள்ளது.



சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தாஸ் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மிகவும் சிம்பிளான மனிதர் சிவகார்த்திகேயன். எந்த பந்தாவும் பண்ணாமல் வலம் வரக் கூடிய வெகு சில நடிகர்களில் இவரும் ஒருவர். தனது குடும்பத்தை பெரிய அளவில் புகழ் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அவர்களை தர்மசங்கப்படுத்துவதில்லை. அதேசமயம் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு அவரது மனைவி வந்து செல்வது வழக்கம்.



சிறப்பு தருணங்களில் தனது குடும்பத்தோடு புகைப்படம் எடுத்து வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். பொங்கல், தீபாவளிக்கு போட்டோ எடுத்து வெளியிடுவார். இந்த நிலையில் மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா, மகன் குகன் ஆகியோருடன் இணைந்து க்யூட்டான போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளர் சிவகார்த்திகேயன்.



குகன் பிறந்த நாளையொட்டி எடுக்கப்பட்ட போட்டோஷூட் இது. இதில் குகன் படு ஜாலியாக அப்பா, அம்மாவின் கைகளில் தவழ்கிறார். அதேபோல அக்கா ஆராதனாவுடனும் ஜாலியாக போஸ் கொடுத்து அமர்ந்திருக்கிறார்.  அப்பாவும், பிள்ளைகளும் வெள்ளை நிற டிரஸ்ஸில் இருக்க, அம்மா ஆர்த்தி பிரவுன் கலர் குர்தாவில் காணப்படுகிறார்.




சிவகார்த்திகேயன்  - ஆர்த்திக்கு 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி திருமணம் நடந்தது. 2013ம் ஆண்டு ஆராதனா பிறந்தார். 2021ல் குகன் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனுடன் இணைந்து மகள் ஆராதனா சினிமாவில் பாட்டும் பாடியுள்ளார்.

Images: Sivakarthikeyan Instagram

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்