ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சுட்டுக் கொன்ற கொலைவெறி கும்பல்...ம.பி.,யில் பயங்கரம்

May 05, 2023,04:55 PM IST
போபால் : மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 6 பேரை, கொலை வெறி கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. மத்திய பிரதேசத்தின் மொரினா பகுதியில் நிலத் தகராறு சுற்றி, வன்முறையாக மாறிதன் விளைவாக 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் இந்த மோதலில் படுகாயம் அடைந்துள்ளனர். 

தீர் சிங் தோமர் மற்றம் கஜேந்திர சிங் தோமர்  ஆகியோரின் குடும்பங்களுக்கு இடையே நிலத்தில் குப்பைகளை கொட்டுவது தொடர்பாக 2013 ம் ஆண்டு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் முற்றியதில் தீர் சிங் தோமரின் குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேரை , கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் கொலை செய்தனர். இதனால் கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.



இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு கோர்ட்டிற்கு வெளியே இரு குடும்பத்தினரும் சமரசம் செய்து கொண்டனர். இதனையடுத்து கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் இன்று ஊருக்குள் திரும்பி வந்தனர். ஊருக்குள் வந்த அவர்கள் மீது தீர் சிங் தோமரின் குடும்பத்தினர் முதலில் கட்டைகளை வைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். பிறகு நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் கஜேந்திர சிங் தோமர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பழைய பகையே இந்த கொடூர கொலை சம்பவத்திற்கு காரணம் என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. ஏற்கனவே கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் செய்த கொலைக்கு பழிவாங்குவதற்காக சமரசம் பேசுவதை போல் பேசி, கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினரை ஊருக்குள் வரவழைத்து, தீர் சிங் தோமரின் குடும்பம் பழிக்கு பழி வாங்கி உள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூர துப்பாக்கிச் சூடு, கொலையில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் அடையாளம் கண்டுபிடித்து, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்தின் வீடியோவும் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்