இன்று ஸ்ரீ ராம நவமி... செல்வ வளம் சேர்க்கும் ராமர் வழிபாடு

Mar 30, 2023,12:11 PM IST
சென்னை : மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஏழாவதும், மிக முக்கியமானதுமானது ஸ்ரீ ராம அவதாரம் தான். மனிதன் இப்படி தான் வாழ வேண்டும் என வேதங்களும், சாஸ்திரங்களும் வழிகாட்டுகின்றன. ஆனால் அவற்றின் வழியில் நடப்பது யாராலும் முடியாது என அனைவரும் நினைக்கிறோம். ஆனால் வேதங்களில் சொன்ன அறத்தை பின்பற்றி, எத்தனை துன்பங்கள் வந்தாலும் நீதிநெறி தவறாமல் வாழ முடியும் என தெய்வமே மனிதனாக அவதாரம் எடுத்து, வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராம பிரான்.

ஒரு மனைவி, ஒரு வில், ஒரு சொல் என வாழ்ந்தவர் ஸ்ரீராமர். அரசாட்சி, சகோதர பாசம், நட்பு, பெற்றோர்களை மதிப்பது, மனைவி மீதான பாசம், வீரம், பொறுமை, கருணை என அனைத்தையும் மனிதகுலத்திற்கு உணர்த்துவதே ராம காவியம் ஆகும். ராமரை விட ராம நாமத்திற்கே மகிமை அதிகம் என்பார்கள். அத்தனை சிறப்பு மிக்க ராமர், பங்குனி மாதம் சுக்லபட்சம் நவமி திதியில், புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தவர்.



ராமன் என்றாலே ஆனந்தம் அளிப்பவன் என்று பொருள். மகாவிஷ்ணுவிடம் ஒருமுறை நவமி மற்றும் அஷ்டமி திதிகள் இரண்டும், தங்களுக்குரிய நாளில் மட்டும் யாரும் சுபகாரியங்கள் நடத்துவதில்லை. தங்களை கெட்ட நாட்களாக ஒதுக்குவதாக சொல்லி வேதனையுடன் முறையிட்டன. அப்போது அவர்களுக்கு வரமளித்த மகாவிஷ்ணு, உங்களை சிறப்பிக்கும் விதமாக கிருஷ்ண அவதாரத்தில் அஷ்டமி திதியிலும், ராம அவதாரத்தில் நவமி திதியிலும் அவதரிக்கிறேன். அப்போது உங்கள் இருவரையும் உலகத்தில் உள்ள அனைவரும் கொண்டாடுவார்கள் என்றார்.

அதன் படி ராம பிரான், நவமி திதியில் பகல் வேளையில் அவதரித்தார். ஸ்ரீராம நவமி நாளில் வீட்டில் உள்ள ராமரின் படம் அல்லது ராமர் பட்டாபிஷேக படத்திற்கு பூக்கள் சூட்டி ஸ்ரீ ராம நாமம் சொல்லி வழிபட வேண்டும். பானகம், நீர்மோர், துளசி, துளசி தண்ணீர், புளியோதரை, கற்கண்டு, எலுமிச்சை சாதம் இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். முடியாதவர்கள் நீர்மோர் மற்றும் பானகம் வைத்து வழிபடலாம். ராமர் காட்டில் வசித்த காலத்தில் நீர்மோர், பானகத்தையே விரும்பி சாப்பிட்டதால் இவை அவருக்கு பிரியமான உணவுகளாக கருதப்படுகிறது.

இந்த நாளில் ராமாயணம் படிப்பது மிகவும் சிறப்பானது. ஸ்ரீ ராம ஜெயம் அல்லது ஸ்ரீ சீதா ராம ஜெயம் என்ற நாமத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை எழுதவோ, உச்சரிக்கவோ செய்யலாம். ராம என்ற நாமத்தை ஒருமுறை உச்சரித்தாலோ 1000 முறை உச்சரித்த பலனும், விஷ்ணு சகஸ்ரநாமம் படித்த பலனும் கிடைக்கும். 

ஸ்ரீ ராமர், 5 நட்சத்திரங்கள் உச்சம் பெற்ற நேரத்தில் அவதரித்தவர் என்பதால் ஸ்ரீ ராமர் ஜாதகத்தை பூஜை செய்வது நவகிரக தோஷங்களை நீக்கும், ஸ்ரீராம நவமி நாளில் ஸ்ரீ ராமரை வழிபட்டால் செல்வ வளம் பெறும். திருமண பேறு, குழந்தைப்பேறு ஆகிய பாக்கியங்கள் கிடைக்கும். பாவங்கள் தீரும். குடும்ப ஒற்றுமை சிறக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

news

கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்