அயோத்தி ராமர் கோவில் சிலைக்கு.. நேபாளத்தில் இருந்து வந்த கற்கள்!

Feb 02, 2023,02:09 PM IST
அயோத்தி : அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் நிறுவப்பட உள்ள ராமர் சிலையை உருவாக்குவதற்காக நேபாளத்தில் இருந்து பெரிய அளவிலான கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை அயோத்தி மக்கள் மலர் தூவியும், மாலைகள் அணிவித்தும் வரவேற்றுள்ளனர்.



அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக இரண்டு சாளகிராம கற்கள், நேபாளத்தில் இருந்து அயோத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்து மத கோட்பாடுகளின் படி, சாளகிராமம் என்பது மகாவிஷ்ணுவின் மறு வடிவமாக பார்க்கப்படுகிறது. தெய்வீக தன்மையை அதிகம் கொண்ட இந்த சாளகிராம கற்கள் நேபாளத்தில் உள்ள ஆறுகளில் மட்டுமே கிடைக்கக் கூடியன. 

இதனால் அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவிலின் மூலஸ்தானத்தில் நிறுவப்பட்ட ராமர் சிலையை வடிவமைப்பதற்காக நேபாளத்தில் இருந்து சாளகிராம கற்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அயோத்தி வந்தடைந்த இந்த கற்களுக்கு ராம ஜென்ம பூமியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஸ்ஷேத்திர டிரஸ்டால் கொண்டு வரப்பட்ட இந்த கற்களை அப்பகுதி மக்கள் மலர்கள், மாலைகள் கொண்டு அலங்கரித்தனர்கள். புரோகிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்த பிறகு, ராமர் கோவில் அமைய இடத்திற்கு கற்கள் கொண்டு செல்லப்பட்டன.

பாறை வடிவிலான சாளகிராம கற்கள் ராமர் மற்றும் சீதை சிலைகள் அமைக்க பயன்படுத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாறைகள் நேபாளத்தின் மியாக்தி மற்றும் முஸ்டங் மாவட்டங்கள் வழியாக பாயும் காளி கந்தகி நதி படுகைகளில் இருந்து, மிகப் பெரிய பழுதூக்கும் இயந்திரங்களைக் கொண்டு நேபாளத்தில் சீதை பிறந்த இடமாக கருதப்படும் ஜானகிபுருக்கு முதலில் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து அயோத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 

நேற்று (பிப்ரவரி 01) இந்தியாவின் கோரக்பூரை வந்தடைந்த இந்த சாரகிராம கற்கள், மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டன.  இந்த சாளகிராம கற்கள் நேபாளத்தில் உள்ள தாமோதர் குண்ட் பகுதியில் உருவானதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு பாறைகளும் 30 டன் எடை கொண்டவை என சொல்லப்படுகிறது. ஒவ்வொன்றும் சுமார் 14 முதல் 18 டன் எடை கொண்டது என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

news

கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்