மும்பை : பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி உணவு டெலிவரி ஆப் தொடங்கியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சமீப ஆண்டுகளாக நாடு முழுவதும் உணவு டெலிவரி செய்யும் ஆப்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த தொழிலில் போட்டி அதிகரித்து விட்டதால் வாடிக்கையளர்களை கவருவதற்காக டிஸ்கவுன்ட், ஆஃபர், விலைகுறைப்பு என போட்டி போட்டுக் கொண்டு அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றன உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள்.
தற்போது இந்த உணவு டெலிவரி தொழிலில் நடிகரும், தொழிலதிபருமான சுனில் ஷெட்டியும் களமிறங்கி உள்ளார். இதற்காக புதிய ஆப் ஒன்றை மே 10 ம் தேதியன்று மும்பையில் அறிமுகம் செய்தார். இதற்கு வாயு (Waayu) என பெயர் வைத்துள்ளனர். அனிருத் கேட்கிரே, மண்டர் லண்டே ஆகியோர் இதன் நிறுவனர்களாக இருந்தாலும் இதற்கு முதலீடு செய்தவர் சுனில் ஷெட்டி தான். இவர் தான் இதற்கு பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்து வருகிறார்.
மும்பையில் உள்ள இந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் கழகத்தின் பின்னணியில் வாயு ஆப் செயல்பட உள்ளது. மற்ற உணவு டெலிவரி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் வாயு ஆப்பில் கொஞ்சம் விலை அதிகம் தான். இருந்தாலும் டெலிவரி சார்ஜ் எதுவும் வசூலிப்பது கிடையாது என்பதால் இது வாடிக்கையாளர்களுக்கு லாபகரமானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த ஆப்பை பயன்படுத்துவதற்கு மாதம் ரூ.1000 செலுத்த வேண்டுமாம். பிறகு இது ரூ.2000 ஆகவும் உயர்த்தப்படுமாம்.
தற்போது மும்பையில் மட்டும் செயல்படும் இந்த ஆப், விரைவில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாம். சுனில் ஷெட்டி ஏற்கனவே சுகாதாரம் மற்றும் விளையாட்டு துறை தொடர்பான பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நடத்தியும், பார்ட்னராகவும் இருந்து வருகிறார். அது மட்டுமல்ல நீண்ட இடைவேளைக்கு பிறகு சினிமாவிற்கும் திரும்புவதற்கு இவரிடம் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஹேரா பேரி 3 படத்தின் மூலம் சினிமாவிற்கு கம் பேக் கொடுக்க உள்ளார் சுனில் ஷெட்டி.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
{{comments.comment}}