தெலங்கானாவில் சந்திரபாபு நாயுடுவின் "சைக்கிளில்" ஏறி.. பயணம் செய்ய பாஜக முடிவு!

Jun 04, 2023,02:27 PM IST
ஹைதராபாத்: தெலங்கானா மாநில சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து சந்திக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலம் தெலங்கானா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் இரு மாநிலங்களிலும் பாஜக தனித்தே போட்டியிட்டு வருகிறது. ஆந்திராவில்  சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என இரு பெரும் கட்சிகள் உள்ளன. இக்கட்சிகள் இரண்டுமே பாஜகவுடன் தொடர்பில்தான் உள்ளன. ஆனாலும் தனித்தே கடந்த 2019 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டன.

அத்தேர்தலில் தெலுங்கு தேசமும், பாஜகவும் தோல்வியைத் தழுவின. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைக் கைப்பற்றினார். எதிரும்புதிருமாக போட்டியிட்டாலும் கூட தெலுங்குதேசமும், பாஜகவும் மறைமுகமாக நட்பாகத்தான் உள்ளன.   ஆனால் தெலுங்கு தேசத்தை காலி செய்யும் நோக்கில் படு வேகமாக செயல்பட்டு வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி.  அக்கட்சிகளுக்கு இடையிலான மோதல் உச்சத்தை எட்டி வரும் நிலையில் தனது கவனத்தை தெலங்கானா பக்கம் திருப்பியுள்ளது பாஜக.




தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.  டெல்லியில் இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்துப் பேசியதாக தெரிகிறது.

தெலுங்கு தேசம் கட்சி கடந்த 2014 லோக்சபா தேர்தலின்போது  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. அதன் ஒருங்கிணைப்பாளராகவும் கூட இருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு கூட்டணியிலிருந்து விலகியது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர மத்திய அரசு மறுத்ததைத் தொடரந்து கூட்டணியை விட்டு விலகியது.


ஆனால் சமீப காலமாக பாஜகவுடன், தெலுங்கு தேசம் இணைந்து செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் மன்கி பாத் நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என்டிஆர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து பேசியிருந்தது நினைவிருக்கலாம். விரைவில் கூட்டணி தொடர்பான தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018ம் ஆண்டு தெலங்கானா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 88 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 19 இடங்களே கிடைத்தன.  ஏஐஎம்எம் கட்சிக்கு 7 இடங்கள் கிடைத்தன. தெலுங்கு தேசம் கட்சிக்கு வெறும்  2 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. பாஜகவுக்கு ஒரு இடம் மட்டுமே. இப்படிப்பட்ட நிலையில், பாஜகவும், தெலுங்கு தேசமும் இணைந்து என்ன செய்யப் போகின்றன என்று தெரியவில்லை.  தெலங்கானா சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்