அவசரமாக டெல்லி சென்ற ஆர். என். ரவி.. அமித் ஷாவுடன் சந்திப்பு!

Jul 08, 2023,03:06 PM IST
டெல்லி: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பரபரப்பான செய்திகளில் சிக்கி வரும் ஆளுநர் ஆர். என். ரவி டெல்லி சென்று இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தது முதலே ஆர் என். ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் வலுத்தபடியே உள்ளது. பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி அளிக்காமல் இருப்பதாக திமுக அரசு தொடர்ந்து குறை கூறி வருகிறது. ஆளுநரின் பேச்சுக்கள் அரசியல் சார்ந்ததாக உள்ளதாகவும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை தூக்கிப் பிடிப்பதாகவும் உள்ளதாக திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.



நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதம் செய்ததும் சர்ச்சையானது. சமீபத்தில் எல்லாவற்றுக்கும் உச்சமாக, அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்து பரபரப்பை கூட்டினார் ஆளுநர். இப்படி ஒரு சம்பவம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடந்ததில்லை என்பதால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த உத்தரவை சில மணி நேரங்களிலேயே நிறுத்தி வைப்பதாக அறிவித்தார் ரவி.

இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில் அவசரமாக அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவருக்கு வேலை என்று எதுவும் இல்லை. எனவே அடிக்கடி டெல்லி செல்கிறார் என்று கிண்டலாக பதிலளித்திருந்தார்.

டெல்லி சென்ற ஆளுநர் ரவி அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசி��ுள்ளார்.இந்த பேச்சின்போது என்ன விவாதிக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்தது தொடர்பாக விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்