சென்னை : தமிழகத்தில் ஒமிக்ரான் XBB, BA2 வகை வைரஸ் பரவி வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா, வைரஸ் காய்ச்சல் ஆகியன அதிகமாக பரவி வருவதாக தகவல் வெளியானது. சளி, காய்ச்சல், தொண்டையில் தொற்று ஆகியவற்றால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் டாக்டர்கள் சிலர் இது வழக்கமாக சீசனில் பரவும் காய்ச்சல் தான் என கூறி வந்தனர். ஆனால் தீவிர வைரஸ் ஒன்று பரவுவதை பில் கேட்ஸ் உள்ளிட்ட பலரும் உறுதியாக கூறி வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவது தொடர்பாக, தமிழக அரசு எடுக்க வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கை, முன்னேச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
அப்போது, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒமிக்ரான் XBB, BA2 வகை வைரஸ் பரவி. ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 70க்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், லாக்டவுன் போடப்படுமா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர் மறுத்து விட்டார்.
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
{{comments.comment}}