ஐபிஎல் முடிஞ்சிடுச்சு.. அடுத்து என்ன?.. டிஎன்பிஎல் 2023 தான்.. வாங்க பார்க்கலாம்!

Jun 04, 2023,12:59 PM IST
சென்னை :  ஐபிஎல் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் அடுத்த விருந்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி விட்டார்கள். தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் ஜூன் 12ம் தேதி தொடங்கவுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த இந்தியன் பிரீமியர் லீக் 2023 சமீபத்தில் முடிவடைந்தது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது.  இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5வது ஐபிஎல் கோப்பையாகும். மும்பை அணியின் 5 கோப்பை சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் சமன் செய்துள்ளது.




ஐபிஎல் திருவிழா முடிந்து விட்டதால் அடுத்து என்ன என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் 2023 போட்டிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டிஎன்பிஎல் 2023 டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகள் தமிழ்நாடு கிரிக்கெட் அசோஷியேஷனால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஏழாவது சீசன் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஜூன் 12 ம் தேதி துவங்கி ஜூலை 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 32 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் கோவை, திருப்பூர், நெல்லை, திண்டுக்கல் சேலம் உள்ளிட்ட 8 அணிகள் மோத உள்ளன. 


ஜூன் 12 ம் தேதி கோவை எஸ்என்ஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோத உள்ளன. கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்