திரெட்ஸூக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ்.. வேலையை காட்டிய எலன் மஸ்க்!

Jul 07, 2023,02:03 PM IST
லாஸ் ஏஞ்சல்ஸ் : மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ் ஆப்புக்கு எதிராக டிவிட்டர் நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ட்விட்டருக்கு போட்டியாக திரெட்ஸ் என்ற ஆப்பினை மெட்டா நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது. இது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் ஆகிய இரண்டு கலந்தது போன்றதாக உள்ளது. இன்ஸ்டாகிராம் ஆப் எப்படி போட்டோ மற்றும் வீடியோக்களை பகிருவதற்காக உள்ளதோ அதே போல் திரெட்ஸ் ஆப் டெக்ஸ்ட் பகிரும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.



மெட்டா நிறுவன சிஇஓ மார்ச் ஜூகர்பெர்க், திரெட்ஸ் ஆப்பை அறிமுகம் செய்த 7 மணி நேரத்திலேயே 10 மில்லியன் பயனாளர்கள் இந்த ஆப்பினை login செய்துள்ளனர். திரெட்ஸ் ஆப், நிச்சயம் ட்விட்டருக்கு கடும் போட்டியாக இருக்கும் என கருதப்பட்டது. 

ஆனால் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் மெட்டா நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் ட்விட்டரை வாங்கி உள்ள எலன் மஸ்க். அதில் காப்பிகேட் ஆப்பினை மெட்டா நிறுவனம் உருவாக்கி உள்ளது. ட்விட்டரின் வணிக ரகசியங்களை திருடி இந்த ஆப்பினை மெட்டா நிறுவனம் உருவாக்கி உள்ளதாகவும் ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் தான் திரெட்ஸ் ஆப்பை உருவாக்கிய இன்ஜினியர் குழுவில் பணியாற்றி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அதோடு தங்களின் வணிக ரகசியங்களை பயன்படுத்துவதை மெட்டா நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள் அல்லது மற்ற உயர்மட்ட ரகசிய தகவல்களை மெட்டா நிறுவனம் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது. ஆனால் ட்விட்டர் முன்னாள் ஊழியர்கள் யாரும் திரெட்ஸ் குழுவில் பணியாற்றவில்லை என தெரிவித்துள்ள மெட்டா நிறுவனம், ட்விட்டரின் ரகசியங்களை திருடி உள்ளதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளது. 

இவர்கள் சண்டை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க திரெட்ஸ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 24 மணி நேரத்தில் 30 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இந்த ஆப்பினை பயன்படுத்த துவங்கி உள்ளனர். ட்விட்டரை போன்றே திரெட்சில் வீடியோ பகிரலாம் என்றாலும், 5 நிமிடம் வரையிலான நீளமான வீடியோக்களையும் பகிரும் வசதி திரெட்சில் அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்