லாஸ் ஏஞ்சலெஸ்: 1984ம் ஆண்டு சென்னையில் ஜெயப்பிரகாஷ் என்பவர் தனது சகோதரி குடும்பத்தை மொத்தமாக தீர்த்துக் கட்டிய சம்பவம் போல அமெரிக்காவில் ஒரு பயங்கரம் அரங்கேறியுள்ளது.
கடந்த 1984ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் விருகம்பாக்கத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். அப்போது தனது சகோதரி, அவரது கணவர், குழந்தைகள் உள்பட மொத்த குடும்பத்தினர் 9 பேரை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றார். அப்போது இந்த வழக்கு தமிழகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. ஆனால் இங்கு சகோதரிக்குப் பதில், மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டுக் கொன்றுள்ளார் இந்த அமெரிக்கர்.
எனோச் நகரில் உள்ள உடா குடியிருப்புப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்த நபரின் மனைவி விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே பிரச்சினை வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவி உள்பட வீட்டில் இருந்த 7 பேரை சுட்டுக் கொன்றார். இதில் 5 குழந்தைகள் அடக்கம். கடைசியில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலையும் செய்து கொண்டார்.
இறந்த 5 குழந்தைகளில் ஒன்றுக்கு 4 வயதுதான் ஆகிறது என்பது பரிதாபமானது. கொலை செய்து தற்கொலையும் செய்து கொண்ட நபரின் பெயர் மிக்கேல் ஹைட் என்றும் அவருக்கு 42 வயது என்றும் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர்கள் - மிக்கேலின் மனைவி, மாமியார், மிக்கேலின் 5 குழந்தைகள் (3 பெண்கள், 2 பையன்கள், 4 முதல் 17 வயது வரையிலானவர்கள்)
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு
அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!
திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!
கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது
திமுக - தேமுதிக கூட்டணிக்கு வேட்டு வைக்குமா.. தனலட்சுமி சீனிவாசன் கிட்னி முறைகேடு விவகாரம்?
Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?
{{comments.comment}}