ஜூன் மாதம் அமெரிக்கா போகிறார் பிரதமர் மோடி.. விருந்துடன் காத்திருக்கும் ஜோ பிடன்

May 11, 2023,09:45 AM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஜூன் மாதம் 22ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், அவரது  மனைவியும் விருந்து அளித்துக் கெளரவிக்கவுள்ளனர்.

அதிபர் ஜோ பிடன் அவரது மனைவி ஜில் பிடன் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி, அங்கு செல்லவுள்ளார். பிரதமரின் இந்தப் பயணம்,  இரு நாட்டு உறவுகளில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும். பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் மேலும் இணைந்து செயல்பட வழி வகுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனாவிடமிருந்து வரும் நெருக்குதல்கள் அதிகரித்து வருவதால், இந்தியாவுடன் மிகவும் இணக்கமாக செயல்பட அமெரிக்கா தீர்மானித்து தனது கொள்கைகளை தளர்த்தி செயல்பட ஆரம்பித்துள்ளது. சீனாவை சமாளிக்க இந்தியாவின் துணை அவசியம் என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளதே இதற்குக் காரணம்.

கடந்த 2021ம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பிடனையும் பார்த்தார். ஆனால் அது குவாத் மாநாடு என்பதால் தனிப்பட்ட முறையிலான அதிகாரப்பூர்வமான பயணமாக அது இல்லை. ஆனால் தற்போது தனிப்பட்ட அதிகாரப்பூர்வமான பயணத்தை பிரதமர் மேற்கொள்ளவுள்ளதால் இந்தப் பயணம் பல்வேறு எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்