"பிரதமர் மோடி முன்பு பாடப் போகிறேன்"... நெகிழ்ச்சியில் அமெரிக்கப் பாடகி மேரி மில்பன்!

Jun 18, 2023,12:18 PM IST
வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபலமான கருப்பர் இனத்தைச் சேர்ந்த பாடகியான மேரி மில்பன், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயத்தின்போது முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடவுள்ளார். 

ஆப்பிரிக்க அமெரிக்கரான மேரி மில்பன் ஹாலிவுட் நடிகையும் கூட. சிறந்த பாடகியான இவர் நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு அழைப்பு  விடுத்துள்ளார் அதிபர் ஜோ பைடன். இதை ஏற்று பிரதமர் மோடி, அமெரிக்கா செல்கிறார். அடுத்த வாரம் அவரது அமெரிக்க பயணம் இடம் பெறுகிறது. இந்த பயணத்தின்போது அவர் நியூயார்க்கிலும், வாஷிங்டனிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.




ஜூன் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வார். ஜூன் 22ம் தேதி அவருக்கு அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் இரவு விருந்து அளித்துக் கெளரவிக்கவுள்ளனர்.

ஜூன் 22ம் தேதி காலை பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் 2 வது முறையாக உரை நிகழ்த்தவுள்ளார் பிரதமர் மோடி. அப்படிச் செய்யும் 2வது உலகத் தலைவர், முதல்வர் இந்தியத் தலைவர் மோடி மட்டுமே.

23ம் தேதி வாஷிங்டனில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களுடனான சந்திப்பிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

ஜூன் 21ம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 9வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில்தான் நடிகை மில்பன் பாடவுள்ளார். அதேபோல வாஷிங்டன் இந்தியர்கள் சந்திப்பிலும் இவர் பாடவுள்ளார். இவர் ஏற்கனவே பாடியுள்ள ஜன கன மன தேசி கீதமும், ஓம் ஜெய் ஜெகதீஷ் பாடலும் இந்தியர்கள் மத்தியில் பிரபலமானவை. 




38 வயதாகும் மேரி மில்பன் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பாடவுள்ளது பெருமையும் கவுரமும் தருவதாக கூறியுள்ளார்.  இதுகுறித்து மேரி மில்பன கூறுகையில், ஐ.நா. பொதுச் செயலாலர் சாபா கோரோசி உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்பதில் பெருமைப்படுகிறேன். மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் மேரி.

கடந்த ஆகஸ்ட் 2022ம் ஆண்டு இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவில் அமெரிக்காவின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரப்பூர்வ விருந்தினராக மேரி மில்பன் டெல்லி வந்திருந்தார்.  இந்திய சுதந்திர தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட முதல் கருப்பர் இன அமெரிக்கப் பெண் என்ற பெருமையும் மேரி மில்பனுக்கு உண்டு. அந்த வகையில் மேரி மில்பனுக்கு இந்த பிரதமர் மோடி நிகழ்ச்சி மிகப் பெரிய சந்தோஷமான விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்