இன்சூரன்ஸ் பணத்திற்காக கூகுள் செய்து கணவரை விஷம் வைத்து கொன்ற பாசக்கார மனைவி

Jun 13, 2023,03:20 PM IST

நியூயார்க் : இன்சூரன்ஸ் பணத்திற்காக, கூகுளில் தீவிரமாக தேடிப் பார்த்து விஷயம் வைத்து கணவரை கொன்ற அமெரிக்க பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கூகுளில் தேடிப் பார்த்த விபரங்களை பார்த்து போலீசாரே ஆடிப் போய் உள்ளனர்.


33 வயதாகும் கெளரி ரிசின்ஸ் என்ற பெண் மூன்று குழந்தைகள் மற்றும் கணவர் எரிக் ரிசின்ஸ் உடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர் தனது கணவரை ஃபென்டனால் என மருத்தினை அளவுக்கு அதிகமாக கொடுத்து கொலை செய்ததாக மார்ச் 2022 ம் ஆண்டு கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இந்த கொலை பற்றி போலீசார் நடத்திய தீரவி விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.




தனது கணவரின் இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு, அவரை கொலை செய்த முடிவு செய்துள்ளார் கெளரி ரிசின்ஸ். இதனால் அமெரிக்காவின் உத்தாக் சிறைச்சாலையில் என்னென்ன வசதிகள் இருக்கும், அமெரிக்காவில் பணக்காரர்களுக்கான சொகுசு சிறைகள் எப்படி இருக்கும், ஒரு இறந்து போனால் அவருக்குரிய இன்சூரன்ஸ் பணத்தை அவரது குடும்பத்திற்கு எத்தனை நாட்களில் இன்சூரன்ஸ் கம்பெனிகள் வழங்கும், இணையத்தில் தேடிய தகவல்கள் குறித்த விபரங்களை ஆராய்ச்சியாளர்கள் எப்படி எடுப்பார்கள், ஒருவரை போலீசார் கட்டாயப்படுத்தி உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த முடியுமா, இறப்பு சான்றிதழில் இறப்பிற்கான காரணத்தை மாற்ற முடியுமா என்பது போன்ற பல விபரங்களை தேடி உள்ளார். 


அது மட்டுமல்ல பெடரல் சட்ட விசாரணைக்கு உட்படுத்தும் போது என்னவெல்லாம் நடக்கும், ஒருவரின் மரண வழக்கு நிலுவையில் இருக்கும் போது இறப்பு சான்றிதழ் கிடைத்து, இன்சூரன்ஸ் பணம் கிடைக்க எத்தவை காலம் ஆகும் என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெளிவாக கூகுளில் தேடி உள்ளார் கெளரி. 


போலீசார் நடத்தி விசாரைணயில், தனது குடித்த ஓட்காவில் வலி நிவாரணத்திற்காக சாப்பிடும் மருந்துகளை அதிக அளவில் கலந்து கொடுத்து கெளரி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. அதிக பவரான மருந்துகளை கடையில் வாங்கிய பிறகும், இதை விட இன்னும் அதிகமான பவரான மருந்து இருந்தால் கொடுங்கள் என கடைக்காரரிடம் கேட்டு வாங்கி உள்ளார். 


தொடர்ந்து மூன்று நாட்கள் தனது கணவருக்கு இந்த மருந்துகளை கலந்து கொடுதஅதுள்ளார். கடைசியாக காதலர் தினம் இரவு விருந்து சாப்பிட்ட எரிக் ரிச்சன்ஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அடுத்த இரண்டு வாரங்களில் அவர் உயிரிழந்துள்ளார். ஆனால் கணவரை இழந்து, மூன்று குழந்தைகளுடன் பரிதாபமாக நின்ற இவரா இப்படி ஒரு கொலையை, அதுவும் பக்காவாக திட்டமிட்டு செய்தார் என நம்ப முடியாமல் எரிக்கின் சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 


இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை விஷம் வைத்து, தன் மீது சந்தேகம் வராத வகையில் கொலை செய்ததுடன் அது பற்றி கூகுளில் அனைத்து விபரங்களையும் தேடி, அதை தனது மகளின் பாடப் புத்தகத்திலும் விரிவாக எழுதி வைத்துள்ளார் கெளரி. ஆனால் எரிக்கின்ற இறப்பு சான்றிதழும், கெளரி தனது மகளின் பாட புத்தகத்தில் எழுதி வைத்த கூகுள் சர்ச் விபரமும் தான் அவரை போலீசில் வசமாக சிக்க வைத்துள்ளது. இவரின் மொத்த கதையையும் கேட்ட நீதிபதி, இவர் மிகவும் ஆபத்தானவர் என கூறி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்